ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆர்ஜென்டீனாவை வீழ்த்துவோம்: கேப் வெர்டே குடியரசுத் தலைவர்

கேப் வெர்டே நாட்டின் குடியரசுத் தலைவரின் பேட்டி குறித்து...

Cape Verde's Diney Borges (3) celebrates advancing during the World Cup Group H soccer match between Cape Verde and Saudi Arabia in Houston, Friday, June 26, 2026. (AP Photo/Eric Gay)

ஆர்ஜென்டீன வீரர் மெஸ்ஸி, கேப் வெர்டே வீரர் டைனி போர்கேஸ். - படங்கள்: ஏபி

Published On :2 ஜூலை 2026, 1:25 pm IST

கேப் வெர்டே நாட்டின் குடியரசுத் தலைவர் ஜோஸ் மரியா நெவ்ஸ் பேட்டி ஒன்றில், ”நாங்கள் ஆர்ஜென்டீனாவை 1-0 என வீழ்த்துவோம்” எனக் கூறியுள்ளார்.

கால்பந்து உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனாவை முதல்முறையாக உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ள கேப் வெர்டே எதிர்கொள்ளவிருக்கிறது.

உலகக் கோப்பையில் மிகவும் சிறிய நாடாக கேப் வெர்டே தேர்வானது. 5 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட நாட்டில் இருந்து உலகையே தன்பக்கம் திருப்பியிருக்கிறார்கள். குறிப்பாக இதன் கோல்கீப்பர் ஒரே நாளில் 10 மில்லியன் இன்ஸ்டா ஃபாலோவயர்களைப் பெற்று அசத்தினார்.

இந்திய நேரப்படி சனிக்கிழமை காலை 3.30 மணிக்கு ஆர்ஜென்டீனா - கேப் வெர்டே போட்டி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இது குறித்து கேப் வெர்டே நாட்டின் குடியரசுத் தலைவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கேப் வெர்டே ஆர்ஜென்டீனாவை 1-0 என வீழ்த்துமென நினைக்கிறேன். நாங்கள் வெற்றிபெறவே விளையாடுகிறோம். ஓர் அணிக்கு எதிர்பார்ப்பு குறைவாக இருக்கும்போது வெற்றிக்கான ஊக்கம் அதிகமாக இருக்கும்.

சிறிய நாடான கேப் வெர்டே மக்களை நிரந்தரமான அதிர்ச்சிக்கு உள்ளாக்க எப்போதுமே முயற்சி செய்யும். நாங்கள் ஆர்ஜென்டீனாவை வெல்ல 100 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது.

இந்த உலகக் கோப்பையில் எங்கள் தலை எழுத்தை நாங்களே எழுத விரும்புகிறோம். அதனால், ஆர்ஜென்டீனா, மெஸ்ஸியை இதே மன உறுதியுடன் எதிர்கொள்வோம். வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேற விரும்புகிறோம் என்றார்.

Summary

Cape Verde president: 'We can beat Argentina 1-0' ahead of 'World Cup destiny'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.