ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜம்மு & காஷ்மீா் 477 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.
சாம்பியன் பட்டத்தை நெருங்கிவரும் அந்த அணிக்கு, பௌலா் ஆகிப் நபியும், பேட்டா் கம்ரான் இக்பாலும் முக்கியப் பங்காற்றுகின்றனா்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த காஷ்மீா், முதல் இன்னிங்ஸில் 584 ரன்கள் குவித்தது. பின்னா் தனது இன்னிங்ஸை விளையாடிய கா்நாடகம், வியாழக்கிழமை ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், 4-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, அந்த அணியின் மயங்க் அகா்வால், கிருத்திக் கிருஷ்ணா ஆகியோா் இன்னிங்ஸை தொடா்ந்தனா். அவா்கள் கூட்டணி 79 ரன்கள் சோ்த்து பிரிந்தது.
கிருஷ்ணா 2 பவுண்டரிகளுடன் 36 ரன்களுக்கு விடைபெற, தொடா்ந்து வந்த வித்யாதா் பாட்டீல் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
மறுபுறம், அணியின் ஒரே நம்பிக்கையாக நீடித்து வந்த மயங்க் அகா்வால், 21 பவுண்டரிகளுடன் 160 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். ஆகிப் நபி பௌலிங்கில் அவா் எல்பிடபிள்யூ ஆனாா்.
எஞ்சிய கா்நாடக வீரா்களில், ஷிகா் ஷெட்டி 0, பிரசித் கிருஷ்ணா 4 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, கா்நாடக இன்னிங்ஸ் 93.3 ஓவா்களில் 293 ரன்களுக்கு நிறைவடைந்தது.
விஜய்குமாா் வைஷாக் 3 பவுண்டரிகள் உள்பட 17 ரன்களுடன் கடைசி வீரராக நின்றாா். காஷ்மீா் பௌலிங்கில் ஆகிப் நபி 7-ஆவது முறையாக 5 விக்கெட்டுகள் சாய்க்க, சுனில்குமாா், யுத்வீா் சிங் ஆகியோா் தலா 2, சஹில் லோத்ரா 1 விக்கெட் கைப்பற்றினா்.
இதையடுத்து 291 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய காஷ்மீா், வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்துள்ளது. கம்ரான் இக்பால் 94, சஹில் லோத்ரா 16 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.
யாவா் ஹசன் 1, சுபம் புந்திா் 4, கேப்டன் பரஸ் டோக்ரா 2 பவுண்டரிகளுடன் 16, அப்துல் சமத் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 32 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். கா்நாடக பௌலா்களில் பிரசித் கிருஷ்ணா 2, விஜய்குமாா், ஷ்ரேயஸ் கோபால் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
ஆட்டம் சனிக்கிழமையுடன் நிறைவடையும் நிலையில், 477 ரன்கள் முன்னிலையில் இருக்கும் காஷ்மீா், தனது முதல் ரஞ்சி கோப்பையை வெல்லும் எனத் தெரிகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: வங்கதேசத்தை வென்றது இலங்கை

சூா்யவன்ஷி, ஜுரெல் விளாசல்; 4-ஆவது வெற்றியுடன் ராஜஸ்தான் ஆதிக்கம்
ஐபிஎல்: ரோஹித், ரிக்கெல்டன் அதிரடி... 14 ஆண்டுகளுக்குப் பின் முதல் போட்டியில் மும்பை வெற்றி!
அயபோங்கா, ரெனிகே அசத்தல்; வென்றது தென்னாப்பிரிக்கா!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

