டிச.2026 உடன் ஓய்வுபெறும் நெய்மர்..! சோகத்தில் ரசிகர்கள்!
பிரேசில் நாட்டின் கால்பந்து வீரர் நெய்மர் ஓய்வு குறித்து...


பிரேசில் நாட்டின் கால்பந்து வீரர் நெய்மர் ஜூனியர் (34 வயது) தனது ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளார்.
இந்தாண்டு வரும் டிசம்பருடன் தனது கால்பந்து பயணத்தை முடித்துக்கொள்ள இருப்பதாகக் கூறியுள்ளார்.
பிரேசில் நாட்டிற்காக அதிக கோல்கள் (79) அடித்த வீரராக இருக்கும் நெய்மர் இந்தாண்டுடன் கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
காயம் காரணமாக பல போட்டிகளைத் தவறவிட்ட நெய்மர் தற்போது தனது சிறு வயது அணியான சந்தோஷ் கிளப்பில் விளையாடி வருகிறார்.
இந்தாண்டு கால்பந்து உலகக் கோப்பையில் பங்கேற்க ஆவலுடன் இருக்கும் நெய்மர் இன்னும் உடல் தகுதி பெறவில்லை என பிரேசில் அணியின் பயிற்சியாளர் கூறி இருந்தார்.
பார்சிலோனா, பிஎஸ்ஜி அணிகளுக்காக விளையாடிய நெய்மர் அல் ஹிலால் அணிக்குச் சென்று இரண்டாண்டுகளில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுமளவுக்கு காயமுற்றார்.
டிச.2026 உடன் ஓய்வுபெறும் நெய்மர்
இந்நிலையில், நெய்மர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
இப்போது என்னாகும் என்று தெரியவில்லை. அடுத்தாண்டு குறித்தும் தெரியாது. அநேகமாக டிசம்பர் வந்ததுடன் நான் ஓய்வு பெறுவேன் என்று நினைக்கிறேன்.
நான் இப்போதைக்கு ஒவ்வொரு ஆண்டாக வாழ்ந்து வருகிறேன். என்னுடைய இதயம் என்ன முடிவெடுக்கிறது என்பதைப் பொருத்திருந்து பார்க்க வேண்டும்.
ஆண்டின் இறுதியில் என் மனது என்ன நினைக்கிறதோ அப்படிதான் நடக்கும்.
இந்தாண்டு மிகவும் முக்கியமானது. சந்தோஷ் கிளப்பிற்கு மட்டுமல்ல, பிரேசில் தேசிய அணிக்கும். உலகக் கோப்பை நடைபெறும் ஆண்டு என்பதால் எனக்கும் முக்கியமானது. இந்த சீசனில் 100 சதவிகிதம் விளையாட விரும்புகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...