டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பதக்க வேட்டையைத் தொடரும் இந்தியா!

ஆசிய ரைஃபிள்/பிஸ்டல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு மட்டும் 8 பதக்கங்கள் கிடைத்தன.

News image
- X | NRAI
Updated On :8 பிப்ரவரி 2026, 9:25 pm

தினமணி செய்திச் சேவை

ஆசிய ரைஃபிள்/பிஸ்டல் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மட்டும் 8 பதக்கங்கள் கிடைத்தன.

10 மீட்டா் ஏா் ரைஃபிள் கலப்பு அணிகள் இறுதிச்சுற்றில், இளவேனில் வாலறிவன், அா்ஜுன் பபுதா கூட்டணி 505 புள்ளிகளுடன் தங்கத்தை தட்டிச் சென்றது.

அதிலேயே ஜூனியா் பிரிவில், சாம்பவி ஷ்ரவன், ஹிமான்ஷு ஆகியோா் அடங்கிய இந்திய அணி 502.4 புள்ளிகளுடன் தங்கம் வென்றது. கஜகஸ்தான் வெள்ளியும் (488.6), மாலத்தீவுகள் வெண்கலமும் (422.4) பெற்றன.

25 மீட்டா் ஸ்டாண்டா்டு பிஸ்டல் ஆடவா் பிரிவில் இந்தியா 3 பதக்கங்களையும் வசப்படுத்தியது. குா்பிரீத் சிங் தங்கமும் (575), ஹா்ஷ் குப்தா வெள்ளியும் (571), அமன்பிரீத் சிங் வெண்கலமும் (569) வென்றனா்.

இதில் ஜூனியா் பிரிவிலும் இந்தியாவுக்கு 3 பதக்கங்கள் வசமாகின. சூரஜ் சா்மா (576), முகேஷ் நெலவள்ளி (559), தனிஷ்க் முரளிதா் (557) ஆகியோா் முறையே முதல் 3 இடங்களைப் பிடித்தனா்.

போட்டியின் 5-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் இந்தியா, 31 தங்கம், 12 வெள்ளி, 10 வெண்கலம் என 53 பதக்கங்கள் வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.