ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிங்க்ஃபீல்டு கோப்பையில் முதலிடத்துக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா..! சாம்பியன் பட்டம் வெல்வாரா?

சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 8-ஆவது சுற்று ஆட்டத்தில் வென்ற ஆர். பிரக்ஞானந்தா குறித்து...

Grandmaster Praggnanandhaa celebrates after winning the 2026 Saint Louis Rapid & Blitz at the Saint Louis Chess Club in St Louis, Missouri.

ஆர். பிரக்ஞானந்தா (கோப்புப் படம்) - ஏபி

Published On :19 ஆகஸ்ட் 2026, 3:06 pm IST

சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியர் - லகிராவை வென்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெறும் இந்தப் ப்போட்டியில், 8-ஆவது சுற்று ஆட்டங்கள் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றன. இதில், தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களுடனும் மாக்சிம் வாச்சியர் வெள்ளை நிற காய்களுடனும் விளையாடினார்கள்.

இந்தப் போட்டியில் பிரக்ஞானந்தா 27 நகர்த்தலில் அசத்தலான வெற்றியைப் பதிவு செய்தார். இந்த வெற்றியின் மூலமாக 5 புள்ளிகளுடன் வெஸ்லி ஸோ உடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்தப் போட்டியில் தொடக்கத்தில் பிரக்ஞானந்தா தனது மூன்று சிப்பாய்களை இழந்தாலும் தனது அதிகாரமிக்க காய்களை இடமாற்றி 28 நகர்த்தலுக்கு முன்பாகவே வென்று மாஸ்டர்கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மீதம் ஒரு சுற்று மட்டுமே மீதமிருக்கும் நிலையில் பிரக்ஞானந்தா கோப்பை வெல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த வெற்றியுடன் கிராண்ட் செஸ் டூர் இறுதிப் போட்டிக்கும் பிரக்ஞானாந்தா தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

8 சுற்றுகள் முடிவில் புள்ளிப் பட்டியல்

வெஸ்லி ஸோ - 5 புள்ளிகள்

பிரக்ஞானந்தா - 5 புள்ளிகள்

சிண்டாரோவ் - 4.5 புள்ளிகள்

வின்சென்ட் கீமர் - 4.5 புள்ளிகள்

கரானா - 4 புள்ளிகள்

ஆரோனியன் - 4 புள்ளிகள்

மேக்ஸிம் வச்சியர் - 4 புள்ளிகள்

சாம் செவியன் - 4 புள்ளிகள்

Summary

Sinquefield Cup: Praggnanandhaa beats Vachier-Lagrave to rise to joint lead

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.