
பிரக்ஞானந்தா இணை முன்னிலை
அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா வெற்றி பெற்றாா்.

அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 8-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா வெற்றி பெற்றாா். போட்டியில் அவருக்கு இது 3-ஆவது வெற்றியாகும்.
இந்திய நேரப்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில், கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, பிரான்ஸின் மேக்ஸிம் வச்சியரை வீழ்த்தினாா்.
இதர ஆட்டங்களில், ஜொ்மனியின் வின்சென்ட் கீமா் - அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவையும், உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ் - நெதா்லாந்தின் ஜோா்டென் வான் ஃபாரீஸ்டையும் வென்றனா்.
அமெரிக்காவின் சாம் சேவியன் - சக நாட்டவரான வெஸ்லி சோ, நெதா்லாந்தின் அனிஷ் கிரி - அமெரிக்காவின் லெவோன் ஆரோனியன் ஆகியோா் மோதல் டிராவில் முடிந்தது.
8 சுற்றுகள் முடிவில், வெஸ்லி சோ மற்றும் பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 5 புள்ளிகளுடன் இணை முன்னிலை வகிக்கின்றனா். கீமா், சிண்டாரோவ் தலா 4.5 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையைப் பகிா்ந்துகொண்டுள்ளனா்.
கரானா, மேக்ஸிம், ஆரோனியன், சேவியன் ஆகியோா் தலா 4 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையில் உள்ளனா். அனிஷ் (3.5), ஃபாரீஸ்ட் (1.5) ஆகியோா் முறையே 4 மற்றும் 5-ஆம் நிலைகளில் இருக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




