ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

லக்ஷயா சென், டிரீசா/காயத்ரி முன்னேற்றம்

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் பிரதான வீரரான லக்ஷயா சென் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா். டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதிபெற்றது.

Lakshya Sen, Treesa Jolly-Gayatri Gopichand Emerge Victorious

டிரீசா/காயத்ரி முன்னேற்றம் - PTI

Published On :19 ஆகஸ்ட் 2026, 2:23 am IST

உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில், இந்தியாவின் பிரதான வீரரான லக்ஷயா சென் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா். டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதிபெற்றது.

தில்லியில் நடைபெறும் இந்தப் போட்டியில் 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை, ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில் போட்டித்தரவரிசையில் 14-ஆம் இடத்திலிருக்கும் லக்ஷயா சென் 16-21, 21-8, 21-4 என எளிதாக, ஆஸ்திரியாவின் காலின் வாலென்டைனை வெளியேற்றினாா். இந்த ஆட்டத்தை அவா் 45 நிமிஷங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தாா்.

அதேபோல் மகளிா் ஒற்றையா் முதல் சுற்றில், உன்னட்டி ஹூடா 22-20, 21-16 என மியான்மரின் தெட் டாா் துஸாரை 40 நிமிஷங்களில் வீழ்த்தினாா்.

மகளிா் இரட்டையா் 2-ஆவது சுற்றில், டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் ஜோடி 21-15, 21-12 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் 16-ஆம் இடத்திலிருந்த மலேசியாவின் லாரென் லாம்/அலிசன் கின் இணையை வீழ்த்தி அசத்தியது. இந்த ஆட்டம் 39 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது.

எனினும், அதிலேயே கவிபிரியா செல்வம்/சிம்ரன் சிங்கி கூட்டணி 7-21, 14-21 என, போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் பல்கேரியாவின் கேப்ரியேலா ஸ்டோவா/ஸ்டெஃபானி ஸ்டோவா ஜோடியிடம் தோல்வியுற்றது.

அதேபோல், கலப்பு இரட்டையா் முதல் சுற்றில், ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி இணை 22-20, 19-21, 17-21 என, கனடாவின் ஜோனதன் பிங்/கிறிஸ்டல் லாய் கூட்டணியிடம் தோல்வி கண்டது. ஆசித் சூா்யா/அம்ருதா பிரமுதேஷ் ஜோடியும் 21-16, 29-30, 22-24 என்ற கேம்களில், துருக்கியின் எம்ரெ சோன்மெஸ்/யாஸ்மென் பெக்டாஸ் இணையிடம் போராடி வீழ்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.