ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தந்தை இறப்பு: 4 நாள்களில் விளையாட வந்த மெஸ்ஸி!

தந்தை இறப்புக்குப் பிறகு நான்கு நாள்களில் விளையாட வந்த லியோனல் மெஸ்ஸி குறித்து...

Inter Miami forward Lionel Messi, center, kicks the ball as Club León defender Juan Guevara, right, defends during the second half of a Leagues Cup soccer match, Wednesday, Aug. 12, 2026, in Miami. (AP Photo/Lynne Sladky)

மெஸ்ஸி அடித்த பந்தை தடுக்கும் எதிரணியின் டிஃபெண்டர்கள். - ஏபி

Published On :13 ஆகஸ்ட் 2026, 11:03 am IST

ஆர்ஜென்டீன வீரர் லியோனல் மெஸ்ஸி (39 வயது) அவரது தந்தை (ஜார்ஜ்) இறப்புக்காக சொந்த ஊருக்குச் சென்றிருந்தவர், நான்காவது நாளில் தற்போது மீண்டும் அமெரிக்காவுக்குத் திரும்பியுள்ளார்.

லீக்ஸ் கோப்பையின் முக்கியமான ஆட்டத்தில் இண்டர் மியாமி அணி லியோன் அணியிடம் 2-3 என்ற வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இந்தப் போட்டியில் மெஸ்ஸி இரண்டாம் பாதியில்தான் களமிறங்கினார். அவரது அசிஸ்டை கோலாக மாற்ற இண்டர் மியாமி அணியினர் தவறவிட்டனர். சம்நிலையில் 2-2 என இருந்த வேலையில், எதிரணி 83ஆவது நிமிஷத்தில் மூன்றாவது கோல் அடித்து போட்டியில் வென்றது.

மெஸ்ஸி இல்லாமல் முன்னதாக ஒரு போட்டியிலும் இன்டர் மியாமி தோல்வியுற்றதால் குரூப் ஸ்டேஜ் உடன் லீக்ஸ் கோப்பையில் இருந்து வெளியேறுகிறது.

குரூப் ஸ்டேஜின் கடைசி போட்டியில் வெல்ல வேண்டும் என்ற நிலையில் இன்டர் மியாமி தோல்வியுற்று வெளியேறியது.

மெஸ்ஸியின் தந்தை இறந்தபிறகு சிறிது காலத்துக்கு கால்பந்து விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியானது. இருந்தும் முக்கியமான போட்டியில் மெஸ்ஸி கலந்து கொண்டார்.

Summary

Lionel Messi makes emotional return to football 4 days after father's death

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.