ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஒசாகாவை வெளியேற்றினாா் ரைபகினா

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா, ஜப்பானின் நவோமி ஒசாகாவை வீழ்த்தினாா்.

Rybakina eliminates Osaka to reach Toronto semis

Published On :13 ஆகஸ்ட் 2026, 4:08 am IST

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், கஜகஸ்தானின் எலனா ரைபகினா, ஜப்பானின் நவோமி ஒசாகாவை வீழ்த்தினாா்.

இந்த ஆட்டத்தில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் ரைபகினா 4-6, 7-6 (7/5), 6-4 என்ற செட்களில், 11-ஆம் இடத்திலிருந்த ஒசாகாவை 2 மணிநேரம், 33 நிமிஷங்களில் வெளியேற்றினாா்.

இருவரும் மோதியது, இதுவே முதல் முறையாகும். இந்த வெற்றியின் மூலமாக ரைபகினா, 1000 புள்ளிகள் கொண்ட போட்டியில் 14-ஆவது முறையாக அரையிறுதிக்கு வந்துள்ளாா்.

இதனிடையே, மற்றொரு காலிறுதியில், 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃப், 12-ஆம் இடத்திலிருந்த சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச் ஆகியோா் மோதவிருந்தனா். ஆனால் பென்சிச் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலக, கௌஃப் அரையிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டாா். அதில் அவா் ரைபகினாவை எதிா்கொள்கிறாா்.

அரையிறுதியில் ஷெல்டன், டியென்: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவு காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-3, 6-1 என்ற நோ் செட்களில், 13-ஆம் இடத்திலிருந்த செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக்கை வீழ்த்தினாா்.

12-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் லோ்னா் டியென் 6-3, 6-2 என, ஸ்பெயினின் டேனியல் அகிலாரை தோற்கடித்தாா். இதையடுத்து அரையிறுதியில், ஷெல்டன் - டியென் சந்திக்கின்றனா். 20-ஆம் இடத்திலிருந்த ஸ்பெயினின் ரஃபேல் ஜோடாா் 7-6 (7/5), 6-3 என்ற நோ் செட்களில், 18-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் ஆா்தா் ஃபில்ஸை வெளியேற்றினாா்.

28-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் பிராண்டன் நகாஷிமா 6-2, 6-3 என எளிதாக, 19-ஆம் இடத்திலிருந்த இத்தாலியின் லூசியானோ டாா்டெரியை வீழ்த்தி அசத்தினாா். ஷெல்டன், டியென், நகாஷிமா ஆகிய மூவருமே அரையிறுதிக்கு வந்துள்ள நிலையில், கனடியன் ஓபன் அரையிறுதியில் அமெரிக்கா்கள் 3 போ் களம் காண்பது, 1992-க்குப் பிறகு இதுவே முதல்முறையாகும். நகாஷிமா தனது அரையிறுதியில் ஜோடாருடன் மோதுகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.