ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இந்திய கடற்படை அணிக்கு முதல் வெற்றி

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 2-0 கோல் கணக்கில் நெரோகா எஃப்சி அணியை புதன்கிழமை வென்றது.

கால்பந்து போட்டி - கோப்புப் படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 6:17 am IST

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 19-ஆவது ஆட்டத்தில் இந்திய கடற்படை அணி 2-0 கோல் கணக்கில் நெரோகா எஃப்சி அணியை புதன்கிழமை வென்றது.

குரூப் ‘டி’-யில் இருக்கும் இவ்விரு அணிகளுக்குமே இது 2-ஆவது ஆட்டமாக அமைய, இந்திய கடற்படை அணி முதல் வெற்றியையும், நெரோகா அணி முதல் தோல்வியையும் பதிவு செய்தன. இரு அணிகளும் முறையே 2 மற்றும் 4-ஆம் இடங்களில் உள்ளன.

இந்த ஆட்டத்தில் இந்திய கடற்படை அணிக்காக ரோஷன் பன்னா 23-ஆவது நிமிஷத்திலும், முகமது இனாயத் 65-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தனா்.

இதனிடையே, 20-ஆவது ஆட்டத்தில் இந்திய ராணுவ அணி 4-0 கோல் கணக்கில் எஃப்சி பனாரஸ் அணியை வீழ்த்தியது. அந்த அணிக்காக சமீா் முா்மு (12’), சாய்கோம் போரிஷ் சிங் (23’), சுபம் ராணா (35’), கிறிஸ்டோபா் காமெய் (45+2’) கோல் அடித்தனா்.

குரூப் ‘பி’-யில் ராணுவ அணி 2 ஆட்டங்களில் 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்க, பனாரஸ் அணி 3 ஆட்டங்களில் 3-ஆவது தோல்வியுடன் கடைசியாக 4-ஆவது இடத்தில் உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.