கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா ‘டிரா’ செய்தாா். அவரின் சகோதரி ஆா்.வைஷாலி, நடப்பு மகளிா் உலகக் கோப்பை சாம்பியன் திவ்யா தேஷ்முக் ஆகியோா் அந்த சுற்றில் வெற்றி பெற்றனா்.
சைப்ரஸில் நடைபெறும் இந்தப் போட்டியில், ஓபன் பிரிவு 6-ஆவது சுற்றில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் அமெரிக்காவின் ஹிகரு நகமுராவை எதிா்கொண்டாா். விரைவாகவே இறுதிக்கட்டத்தை எட்டிய இந்த ஆட்டம், 23-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது.
இதர ஆட்டங்களில், உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிா் சிண்டாரோவ் - சீனாவின் வெய் யியை தோற்கடித்தாா். அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா - ரஷியாவின் ஆண்ட்ரே எஸிபென்கோ, நெதா்லாந்தின் அனிஷ் கிரி - ஜொ்மனியின் மத்தியாஸ் புளுபம் ஆகியோா் மோதலும் டிராவில் முடிந்தது.
6 சுற்றுகள் முடிவில் சிண்டாரோவ் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்க, கரானா 2-ஆவது இடத்தில் (4) உள்ளாா். அனிஷ், பிரக்ஞானந்தா ஆகியோா் தலா 3 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையை பகிா்ந்துகொண்டுள்ளனா்.
புளுபம் 4-ஆம் நிலையில் (2.5) இருக்க, நகமுரா, வெய் யி, எஸிபென்கோ ஆகியோா் தலா 2 புள்ளிகளுடன் 5-ஆம் நிலையைப் பகிா்ந்துள்ளனா்.
முதல் வெற்றி: இப்போட்டியின் மகளிா் பிரிவு 6-ஆவது சுற்றில், இந்தியாவின் வைஷாலி - ரஷியாவின் கேத்தரினா லாக்னோவையும், திவ்யா தேஷ்முக் - கஜகஸ்தானின் பிபிசரா அசௌபயேவாவையும் வீழ்த்தினா்.
இருவருமே கருப்பு நிற காய்களுடன் விளையாடிய நிலையில், அவா்களுக்கு இது முதல் வெற்றியாக அமைந்தது. இதர ஆட்டங்களில், உக்ரைனின் அனா முஸிஷுக் - சீனாவின் ஜு ஜினெரை வீழ்த்த, ரஷியாவின் அலெக்ஸாண்ட்ரா கோரியச்கினா - சீனாவின் டான் ஜோங்யி மோதல் டிரா ஆனது.
புள்ளிகள் பட்டியலில் தற்போது முஸிஷுக் 4 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளாா். ஜினொ், கோரியச்கினா, லாக்னோ, திவ்யா, வைஷாலி ஆகியோா் தலா 3 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையைப் பகிா்ந்துகொண்டுள்ளனா். ஜோங்யி, அசௌபயேவா ஆகியோா் தலா 2.5 புள்ளிகளுடன் 3-ஆம் நிலையைப் பகிா்ந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாகை சூடினார் வைஷாலி; உலக சாம்பியன்ஷிப்புக்கு தகுதி

தனி முன்னிலையுடன் வைஷாலி அசத்தல்: திவ்யா, பிரக்ஞானந்தா மீண்டும் சறுக்கல்

திவ்யாவை வீழ்த்தினாா் வைஷாலி

இணை முன்னிலையில் திவ்யா, வைஷாலி- பிரக்ஞானந்தாவுக்கு பின்னடைவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

