126 ஆண்டுகளை நிறைவுசெய்த பார்சிலோனா..! புதிய திடலில் சிறப்பு ஏற்பாடு!
புகழ்பெற்ற கால்பந்து கிளப் எப்ஃசி பார்சிலோனா குறித்து...
புகழ்பெற்ற கால்பந்து கிளப் எப்ஃசி பார்சிலோனா குறித்து...
By இணையதளச் செய்திப் பிரிவு
Dineshkumar
கால்பந்து கிளப் அணியான பார்சிலோனா அணியின் 126ஆவது ஆண்டிற்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், கிளப்பின் புணரமைக்கப்பட்ட திடலில் நடைபெறும் அல்வெஸுக்கு எதிரான போட்டியில் இந்தச் சிறப்பான நாளைக் கொண்டாட, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பார்சிலோனாவின் சாதனைகள்
உலக கால்பந்தாட்ட ரசிகர்கள் மத்தியில் ஸ்பெயினில் உள்ள எஃப்சி பார்சிலோனா அணிக்கு மிகுந்த வரவேற்பு இருக்கிறது. இந்தக் கால்பந்து கிளப் அணி 1899ஆம் ஆண்டு நவ.29ஆம் தேதி உருவாக்கப்பட்டது.
பார்சிலோனா அணி உள்ளூர் போட்டிகளில் 74 கோப்பைகளும் சர்வதேச போட்டிகளில் 22 கோப்பைகள் என மொத்தமாக 142 கோப்பைகளை வென்றுள்ளது.
சமூக வலைதளங்களில் அதிகமாக பின்பற்றப்படும் ஒரு அணியாகவும் பார்சிலோனா இருக்கிறது. பேலன்தோர் விருதுகளை அதிகம் முறை வென்றவர்களும் இந்த அணியில் இருக்கிறார்கள்.
தற்போதைய லா லீகா தொடரில் பார்சிலோனா அணி 31 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.
பார்சிலோனாவில் மெஸ்ஸி
பார்சிலோனா அணிக்கு முக்கிய அடையாளமாக மெஸ்ஸி இருக்கிறார். இவர் 2004 முதல் 2021 வரை மெஸ்ஸி பார்சிலோனா அணிக்காக விளையாடியுள்ளார்.
474 கோல்கள் இந்த அணியில் விளையாடி அடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 17 ஆண்டுகள் விளையாடியுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு மெஸ்ஸியின் ஊதியம் பார்சிலோனா அணியின் குறிப்பிட்ட சதவிகிதத்தைவிட (விதி) அதிகமாக இருப்பதால் அவரது ஒப்பந்தத்தை நிராகரித்தது. மெஸ்ஸி தற்போது இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.
பார்சிலோனா அணிக்காக அதிக முறை (778) விளையாடியவர்களில் லயோனல் மெஸ்ஸி முதலிடத்தில் இருக்கிறார்.
இந்த கிளப்பில் அதிக கோல்கள் அடித்தவர் பட்டியலிலும் மெஸ்ஸி இருக்கிறார்.
Fans are celebrating the 126th anniversary of the football club Barcelona.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது