தமிழ்நாடு அணியை வென்றது ராஜஸ்தான்
சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி தனது முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் புதன்கிழமை தோற்றது.
சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி தனது முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் புதன்கிழமை தோற்றது.
By தினமணி செய்திச் சேவை
Vishwanathan
அகமதாபாத்: சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு அணி தனது முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தானிடம் புதன்கிழமை தோற்றது.
முதலில் தமிழ்நாடு 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் சேர்க்க, ராஜஸ்தான் 16.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 170 ரன்களை எட்டி வென்றது.
முன்னதாக டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங்கை தேர்வு செய்தது. அமித் சாத்விக் 21, துஷர் ரஹேஜா 18, ஷிவம் சிங் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
நாராயண் ஜெகதீசன் 29, சாய் கிஷோர் 5, ஷாருக் கான் 3, ராஜ்குமார் 17, கேப்டன் வருண் சக்கரவர்த்தி 11 ரன்களுடன் பெவிலியன் திரும்பினர். ஓவர்கள் முடிவில் அதிகபட்சமாக சோனு யாதவ் 2 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 43, குர்ஜப்னீத் சிங் ரன்னின்றி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ராஜஸ்தான் பெளலர்களில் அசோக் சர்மா 3, மானவ் சுதர் 2, கமலேஷ் நாகர்கோடி 1 விக்கெட் எடுத்தனர்.
அடுத்து 170 ரன்களை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணியில் பரத் சர்மா 3, ஷுபம் கர்வால் 32, மஹிபால் லோம்ரோர் 17, கார்த்திக் சர்மா 35 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.
தீபக் ஹூடா 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உள்பட 76 ரன்கள் விளாசி அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தார். குணால் சிங் 4 ரன்களுடன் துணை நின்றார். தமிழ்நாடு தரப்பில் டி.நடராஜன் 2, குர்ஜப்னீத் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
சாய் சுதர்ஷன் சேர்ப்பு: சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 கிரிக்கெட் போட்டிக்கான தமிழ்நாடு அணியில் சாய் சுதர்ஷன் சேர்க்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது