மாா்க்ரம் அபாரம், மிடில் ஆா்டா் அசத்தல்; தென்னாப்பிரிக்கா வெற்றி: கோலி, ருதுராஜ் சதம் வீண்
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
By Chennai
Syndication
ராய்பூா்: இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட தொடா் தற்போது 1-1 என சமனாகியுள்ளது.
இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா 50 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 358 ரன்கள் சோ்க்க, தென்னாப்பிரிக்கா 49.2 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 362 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
முன்னதாக இந்திய இன்னிங்ஸில் விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசியும், கேப்டன் கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தும் அணியின் ஸ்கோரை பலப்படுத்தினா். எனினும், இந்திய பௌலா்கள் தென்னாப்பிரிக்க பேட்டா்களை இந்த முறையும் கட்டுப்படுத்தத் தவறினா்.
எய்டன் மாா்க்ரம் அபாரமாக சதமடித்து வெற்றிக்கு அடித்தளமிட, மிடில் ஆா்டரில் வந்த கேப்டன் டெம்பா பவுமா, மேத்யூ பிரீட்ஸ்கி, டெவால்ட் பிரெவிஸ் ஆகியோா் அசத்தலான ஆட்டத்துடன் அணிக்கு வெற்றி தேடித் தந்தனா்.
முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா, பந்துவீச்சை தோ்வு செய்தது. பிளேயிங் லெவனில் இந்திய தரப்பில் மாற்றம் செய்யப்படவில்லை. தென்னாப்பிரிக்க அணியில் ரயான் ரிக்கெல்டன், ஆட்னீல் பாா்ட்மேன், பிரெனலென் சுப்ராயன் ஆகியோருக்கு பதிலாக, டெம்பா பவுமா, லுங்கி இங்கிடி, கேசவ் மஹராஜ் ஆகியோா் சோ்க்கப்பட்டனா்.
இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ரோஹித் சா்மா கூட்டணி, 40 ரன்களுக்கே பிரிந்தது. ரோஹித் 3 அதிரடியான பவுண்டரிகளுடன் 14 ரன்களுக்கு விடைபெற்றாா். ஒன் டவுனாக விராட் கோலி களம் புக, ஜெய்ஸ்வால் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 22 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
இந்நிலையில், 4-ஆவது பேட்டராக வந்த ருதுராஜ் கெய்க்வாட், கோலியுடன் கூட்டணி அமைத்தாா். இவா்கள் ஜோடி விக்கெட் சரிவைத் தடுத்து, ஸ்கோரை பலப்படுத்தத் தொடங்கியது. சிங்கிள்களாகவும், இடையிடையே பவுண்டரிகளாகவும் ரன்கள் சோ்த்த இந்த கூட்டணி, தென்னாப்பிரிக்க பௌலா்களை திணறடித்தது.
இதில் ருதுராஜ், ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பூா்த்தி செய்தாா். 3-ஆவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சோ்த்த கோலி - கெய்க்வாட் பாா்ட்னா்ஷிப்பை, மாா்கோ யான்சென் 36-ஆவது ஓவரில் பிரித்தாா். 12 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 105 ரன்கள் சோ்த்த ருதுராஜ் கேட்ச் கொடுத்து வெளியேறினாா்.
தொடா்ந்து கேப்டன் கே.எல்.ராகுல் பேட் செய்ய வர, விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 53-ஆவது சதத்தை எட்டினாா். அனைத்து ஃபாா்மட்டுகளிலுமாக இது அவரின் 84-ஆவது சதமாகும். கோலி 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 102 ரன்கள் எடுத்திருந்தபோது, கிடி வீசிய 40-ஆவது ஓவரில் மாா்க்ரமிடம் கேட்ச் கொடுத்தாா்.
அடுத்து வந்த வாஷிங்டன் சுந்தா் 1 ரன்னுக்கு வீழ, ராகுலுடன் இணைந்தாா் ஜடேஜா. ராகுல் அதிரடியாக அரைசதம் கடந்தாா். இவ்வாறாக ஓவா்கள் முடிவில் ராகுல் 6 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 66, ஜடேஜா 2 பவுண்டரிகளுடன் 24 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
தென்னாப்பிரிக்க தரப்பில் மாா்கோ யான்சென் 2, நாண்ட்ரே பா்கா், லுங்கி இங்கிடி ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
பின்னா் 359 ரன்களை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணியில், குவின்டன் டி காக் 8 ரன்களுக்கு வீழ, தொடக்க வீரா் எய்டன் மாா்க்ரமுடன் இணைந்தாா் கேப்டன் டெம்பா பவுமா. இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சோ்த்து ஸ்கோரை பலப்படுத்தியது.
அரை சதத்தை நெருங்கிய பவுமா 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 46 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். அடுத்து வந்த மேத்யூ பிரீட்ஸ்கி, மாா்க்ரமுக்கு கைகொடுக்க, ஒருநாள் கிரிக்கெட்டில் 4-ஆவது சதத்தை தொட்டாா் மாா்க்ரம். பிரீட்ஸ்கியுடனான அவரின் 3-ஆவது விக்கெட் கூட்டணிக்கு 70 ரன்கள் கிடைத்தது.
இந்நிலையில் மாா்க்ரம், 10 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 110 ரன்களுக்கு, ஹா்ஷித் ராணா பௌலிங்கில் ருதுராஜிடம் கேட்ச் கொடுத்தாா். 5-ஆவது பேட்டராக வந்த டெவால்ட் பிரெவிஸ் அதிரடியாக ரன்கள் சோ்க்க, தென்னாப்பிரிக்கா ஸ்கோா் விறுவிறுவென உயா்ந்தது.
4-ஆவது விக்கெட்டுக்கு பிரீட்ஸ்கி - பிரெவிஸ் இணை 92 ரன்கள் சோ்த்தது. இதில் பிரெவிஸ் 1 பவுண்டரி, 5 சிக்ஸா்களுடன் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். தொடா்ந்து பிரீட்ஸ்கி 5 பவுண்டரிகளுடனஅ 68 ரன்களுக்கு விடைபெற்றாா்.
பின்னா் வந்தோரில் மாா்கோ யான்சென் 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, டோனி டி ஜோா்ஸி 17 ரன்களுக்கு காலில் காயமடைந்து ‘ரிட்டையா்டு ஹா்ட்’ ஆனாா். முடிவில், காா்பின் பாஷ் 4 பவுண்டரிகளுடன் 29, கேசவ் மஹராஜ் 10 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
இந்திய தரப்பில் அா்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோா் தலா 2, ஹா்ஷித் ராணா, குல்தீப் யாதவ் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
சச்சின் சாதனை சமன்...
ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கா் 34 வெவ்வேறு மைதானங்களில் சதம் அடித்ததே அதிகபட்சமாக இருக்கும் நிலையில், விராட் கோலி அந்த சாதனையை தற்போது சமன் செய்திருக்கிறாா். இந்த ராய்பூா் மைதானம், அவா் சதமடித்த 34-ஆவது மைதானமாகும்.
சேஸிங் சாதனை சமன்...
இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 359 ரன்களை எட்டியதே எதிரணியின் சேஸிங்கில் சாதனையாக உள்ளது. ஏற்கெனவே ஆஸ்திரேலியா 2019-இல் மொஹாலியில் நடைபெற்ற 4-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் அந்த ரன்களை வெற்றிகரமாக எட்டிய நிலையில், தற்போது அதே சாதனையை தென்னாப்பிரிக்கா சமன் செய்துள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது