சைப்பரஸýக்கு எதிரான டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் எஸ்டோனிய பேட்டர் சஹில் செளஹான் 27 பந்துகளில் சதமடித்து (5 பவுண்டரிகள், 13 சிக்ஸர்கள்), டி20 கிரிக்கெட்டில் அதிவேக சதமடித்தவராக சாதனை படைத்தார். மொத்தமாக 41 பந்துகளில் 6 பவுண்டரிகள், 18 சிக்ஸர்கள் விளாசி 144 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த அவர், டி20 கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (18) அடித்தவராகவும் சாதனை படைத்தார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா மகளிர் அணிகள் இடையேயான 2}ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் பெங்களூரில் புதன்கிழமை நடைபெறுகிறது. மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா பேட்டர்கள் வரிசையில் 2 இடங்கள் முன்னேறி 3}ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
இந்திய கோல்ஃப் வீரர்களான சுபாங்கர் சர்மா, ககன்ஜீத் புல்லார் ஆகியோர் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றனர். இருவருக்குமே இது முதல் ஒலிம்பிக் போட்டியாகும். சர்வதேச கோல்ஃப் சம்மேளனம் வெளியிட்ட ரேங்கிங் பட்டியல் அடிப்படையில் அவர்கள் தகுதிபெற்றுள்ளனர். இதிலேயே மகளிர் பிரிவு தரவரிசை வரும் 24}ஆம் தேதி வெளியாகும்போது, இந்தியாவின் அதிதி அசோக், தீக்ஷா தாகர் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கால்பந்து அணிக்கான பயிற்சியாளர் விரைவில் நியமிக்கப்படுவார் என்றும், நீண்டகால கேப்டன் சுனில் சேத்ரி ஓய்வு பெற்றதால் அணியில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதெ மிகப்பெரிய சவால் என்றும் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் ஐ.எம். விஜயன் தெரிவித்தார்.
இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்காக முன்னாள் வீரர்கள் கெளதம் கம்பீர், டபிள்யூ.வி. ராமன் ஆகியோரிடம், பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் குழு செவ்வாய்க்கிழமை நேர்காணல் நடத்தியுள்ளது. இதில் கம்பீர் அந்தப் பொறுப்புக்கு தேர்வாக இருப்பதாகத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டி20 கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த பாபர் அசாம்..! கெயில், விராட் கோலி சாதனை முறியடிப்பு!

சூா்யவன்ஷி, ஜுரெல் விளாசல்; 4-ஆவது வெற்றியுடன் ராஜஸ்தான் ஆதிக்கம்
ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி!
மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


