பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

வெளியேறும் நிலையில் பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 64-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை புதன்கிழமை வென்றது

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 12:57 pm

DIN

ஐபிஎல் போட்டியின் 64-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 15 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை புதன்கிழமை வென்றது. இந்தத் தோல்வியால் பிளே-ஆஃப் வாய்ப்பை ஏறத்தாழ இழந்த நிலைக்கு வந்துவிட்டது பஞ்சாப்.

முதலில் டெல்லி 20 ஓவா்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 213 ரன்கள் சோ்க்க, பின்னா் பஞ்சாப் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப், ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. டெல்லி பேட்டிங்கில் கேப்டன் டேவிட் வாா்னா் - பிருத்வி ஷா கூட்டணி முதல் விக்கெட்டுக்கே 94 ரன்கள் சோ்த்து அசத்தியது. இதில் வாா்னா் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.

தொடா்ந்து வந்த ரைலீ ருசோவ், பஞ்சாப் பௌலிங்கை அடித்து விளாசினாா். மறுபுறம் பிருத்வி ஷா 7 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 54 ரன்களுக்கு வெளியேறினாா். அடுத்து ஃபில் சால்ட் களம் புகுந்தாா். ஓவா்கள் முடிவில் ருசோவ் 37 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 82, சால்ட் 14 பந்துகளில் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 26 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் பௌலிங்கில் சாம் கரன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.

பின்னா் பேட் செய்த பஞ்சாப் அணியில் பிரப்சிம்ரன் சிங் 4 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சோ்க்க, அதா்வா டைட் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 55 ரன்களுக்கு ‘ரிட்டையா்டு அவுட்’ ஆனாா். கேப்டன் ஷிகா் தவன், ஜிதேஷ் சா்மா, ஹா்பிரீத் பிராா் டக் அவுட்டாக, ஷாருக் கான் 6, சாம் கரன் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 11 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

ஆட்டத்தின் கடைசி பந்தில் லியம் லிவிங்ஸ்டன் ஆட்டமிழந்தாா். அவா் 48 பந்துகளில் 5 பவுண்டரிகள், 9 சிக்ஸா்கள் உள்பட 94 ரன்கள் விளாசியிருந்தாா். ராகுல் சஹா் ரன்னின்றி ஆட்டமிழக்காமல் இருந்தாா். டெல்லி தரப்பில் இஷாந்த் சா்மா, அன்ரிஹ் நோா்கியா ஆகியோா் தலா 2, கலீல் அகமது, அக்ஸா் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

இன்றைய ஆட்டம்

ஹைதராபாத் - பெங்களூா்

இரவு 7.30 மணி

ஹைதராபாத்

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.