/

செஸ் கிராண்ட்மாஸ்டர்கள்: தொடரும் தமிழகத்தின் ஆதிக்கம்!

இந்திய அளவில் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்களிப்பு மேலும் அதிகமாகியுள்ளது. 

News image
படம் - twitter.com/Rameshchess
Updated On :1 பிப்ரவரி 2024, 6:39 pm

ச. ந. கண்ணன்


இந்தியாவின் 79-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த 16 வயது பிரனேஷ்.

பிரனேஷ், தமிழ்நாட்டின் 28-வது செஸ் கிராண்ட்மாஸ்டர். அதாவது இந்தியாவிலுள்ள 79 செஸ் கிராண்ட்மாஸ்டர்களில் 28 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதன்மூலம் இந்திய அளவில் கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கையில் தமிழகத்தின் பங்களிப்பு மேலும் அதிகமாகியுள்ளது. 

1988-ல் இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார் தமிழகத்தின் விஸ்வநாதன் ஆனந்த். அவரை முன்னுதாரணமாகக் கொண்டு இன்றுவரை ஏராளமான கிராண்ட்மாஸ்டர்கள் நமக்குக் கிடைத்து வருகிறார்கள். 

மாநிலங்கள் வழங்கிய செஸ் கிராண்ட்மாஸ்டர்கள்
 

 மாநிலங்கள்கிராண்ட்மாஸ்டர்களின் எண்ணிக்கை
 தமிழ்நாடு 28 
 மஹாரஷ்டிரம் 11
 மேற்கு வங்கம் 10
 தில்லி 6
 தெலங்கானா  5
ஆந்திரப் பிரதேசம் 4
 கேரளா 3
 கர்நாடகம்  4
 ஒடிஷா 2
 குஜராத்  2
 கோவா 2
 ராஜஸ்தான் 1
 ஹரியாணா 1
 மொத்தம்  75

தமிழக செஸ் கிராண்ட்மாஸ்டர்கள்

 எஸ். கிடாம்பி

 (2009, இந்தியாவின் 19-வது கிராண்ட்மாஸ்டர்)

 எஸ்.பி. சேதுராமன்

 (2011, இந்தியாவின் 24-வது கிராண்ட்மாஸ்டர்)

 எம்.ஆர். வெங்கடேஷ்

 (2012, இந்தியாவின் 28-வது கிராண்ட்மாஸ்டர்)

 விஷ்ணு பிரசன்னா

 (2013, இந்தியாவின் 33-வது கிராண்ட்மாஸ்டர்)

 கார்த்திகேயன் முரளி

 (2015, இந்தியாவின் 38-வது கிராண்ட்மாஸ்டர்)

 கார்த்திகேயன்

 (2018, இந்தியாவின் 57-வது கிராண்ட்மாஸ்டர்)

 என்.ஆர். விசாக்

 (2019, இந்தியாவின் 59-வது கிராண்ட்மாஸ்டர்)

 குகேஷ்

 (2019, இந்தியாவின் 60-வது கிராண்ட்மாஸ்டர்)

 இனியன்

 (2019, இந்தியாவின் 61-வது கிராண்ட்மாஸ்டர்)

 ஆகாஷ் கணேசன்

 (2020, இந்தியாவின் 66-வது கிராண்ட்மாஸ்டர்)

 அர்ஜுன் கல்யாண்

 (2021, இந்தியாவின் 68-வது கிராண்ட்மாஸ்டர்)

 பரத் சுப்ரமணியன்

 (2022, இந்தியாவின் 73-வது கிராண்ட்மாஸ்டர்)

இந்தியாவில் 28 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் இருந்தாலும் இதுவரை 13 மாநிலங்களில் இருந்து மட்டுமே செஸ் கிராண்ட்மாஸ்டர்கள் கிடைத்துள்ளார்கள். தமிழ்நாட்டுக்கு அடுத்ததாக மஹாராஷ்டிரமும் மேற்கு வங்கமும் அதிக கிராண்ட்மாஸ்டர்களைத் தந்துள்ளன. 

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீஹார், பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து இதுவரை ஒரு கிராண்ட்மாஸ்டரும் நமக்குக் கிடைக்கவில்லை. செஸ்ஸைத் தீவிரமாகக் கற்றுக்கொள்ள ஆங்கில அறிவும் அவசியம் என்பதால் இதுவும் ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. எனினும் செஸ்பேஸ் போன்ற செஸ் தளங்கள் தற்போது ஹிந்தியிலும் இயங்குவதால் விரைவில் நிலைமை மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய செஸ்ஸின் வளர்ச்சி

 வருடம் இந்திய கிராண்ட்மாஸ்டர்கள் எண்ணிக்கை
 1988 1
 1991 1
 1997 1
 2000 2
 2001 1
 2002 1
 2003 2
 2004 2
 2005 0
 2006 4
 2007 1
 2008 2
 2009 2
 2010 3
 2011 2
 2012 4
 2013 6
 2014 1
 2015 5
 2016 3
 2017 6
 2018 8
 2019 7
 2020 2
 2021 5
 2022 5
 2023 2
 மொத்தம் 79

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.