தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்ஃபார்ம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

ரஞ்சி கோப்பை: தில்லியின் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழ்நாடு

தமிழக அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் முதல் நாள் முடிவில் தில்லி அணி, 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது.

News image
துருவ் ஷோரே (கோப்புப் படம்)
Updated On :1 பிப்ரவரி 2024, 11:12 am

DIN


தமிழக அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் முதல் நாள் முடிவில் தில்லி அணி, 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது.

தமிழக அணி 3 புள்ளிகளும் தில்லி அணி 1 புள்ளியும் பெற்றுள்ள நிலையில் இரு அணிகளும் ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் மோதுகின்றன. தில்லி அணியிலிருந்து நிதிஷ் ராணா நீக்கப்பட்டுள்ளார். இஷாந்த் சர்மா, சைனி, சிமர்ஜீத் சிங் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. டாஸ் வென்ற தமிழக அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. தில்லி அணியின் துருவ் ஷோரே 66, ஜான்டி சித்து 57 ரன்கள் எடுத்தார்கள். எல். விக்னேஷும் சந்தீப் வாரியரும் நன்குப் பந்துவீசி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

முதல் நாள் முடிவில் தில்லி அணி, 76 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்துள்ளது. லலித் யாதவ் 33, பிரான்ஷு 4 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.