தனிநபர் பிரிவில் இந்திய இளம் வீரர் டி.குகேஷும் நிஹால் சரீன், மகளிர் பிரிவில் போலந்தின் ஒலிவியாவும் தங்கம் வென்றனர்.
குகேஷ் 9/11 (2867) , நிஹால் சரீன் 7.5/10 (2774) வெற்றிகளுடன் தங்கம் வென்றார்.
அதே போல் இங்கிலாந்து வீரர் டேவிட் ஹோவலும் 7.5/8 (2898), உஸ்பெக் வீரர் ஜஹோங்கீர் வகிடோவ் 6.5/8 (2813), மட்டூஸ் பேர்டல் 8.5/10 (2778) பதக்கம் வென்றனர்.
மகளிர் பிரிவில் ஒலிவியா கியால்பாஸô 9.5/11 வெற்றிகளுடன் தங்கம் வென்றார். ஸ்வீடன் வீராங்கனை பியா கிராம்ளிங் 9.5/11 (2532), ஜிஎம் நினோ பட்ஷியாவிலி 9.5/11 (2565) பேட் எர்டென் 8.5/11 (2460), ஜேனா சினிடெர் 9/10 (2414) ஆகியோரும் பதக்கம் வென்றனர்.
இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி வெள்ளிப் பதக்கம், பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கம் வென்றனர்.
தனிநபர் மகளிர் பிரிவில் இந்தியாவின் தான்யா சச்தேவ், ஆர். வைஷாலி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.