அதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரியை உயர்த்தி திட்டங்களை நிறைவேற்றுவோம் : இபிஎஸ் விளக்கம்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!
/

கடைசி நிமிடத்தில் அறிவிப்பு: பாகிஸ்தான் தொடரை ரத்து செய்து நாடு திரும்பும் நியூசிலாந்து அணி

நியூசிலாந்து பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் பிரதமர் பேசினார்.

News image
நியூசிலாந்து அணி வீரர்கள்
Updated On :28 ஜனவரி 2024, 4:10 am

DIN

பாகிஸ்தானில் மூன்று ஒருநாள், 5 டி20 ஆட்டங்களை விளையாடத் திட்டமிட்டு பாகிஸ்தானுக்கு வந்தது நியூசிலாந்து அணி. 18 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்வதால் இந்தத் தொடர் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

ஒருநாள் ஆட்டங்கள் ராவல்பிண்டியிலும் டி20 தொடர் லாகூரிலும் நடைபெறவிருந்தன.

முதல் ஒருநாள் ஆட்டம் இன்று நடைபெற இருந்தது.

ஆனால், ஆட்டம் தொடங்க சில நிமிடங்கள் வரை இரு அணி வீரர்களும் மைதானத்துக்கு வரவில்லை, ரசிகர்களும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அசாதாரணமான சூழல் நிலவியது.

இந்நிலையில் பாகிஸ்தானில் விளையாடவிருந்த ஒருநாள், டி20 தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தகவல் அளித்தது. 

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை ரத்து செய்கிறோம். நியூசிலாந்து அணி வீரர்கள் உடனடியாக நாடு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், தொடர் ரத்தானது குறித்து அறிக்கை வெளியிட்டது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தானும் உச்சக்கட்ட பாதுகாப்பை இங்கு கிரிக்கெட் விளையாட வரும் அணிகளுக்கு வழங்கி வருகிறோம். நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கும் அத்தகைய பாதுகாப்பை உறுதி செய்தோம். நியூசிலாந்து பிரதமரிடம் தனிப்பட்ட முறையில் பாகிஸ்தான் பிரதமர் பேசினார். உலகளவில் சிறந்த புலனாய்வு அமைப்பு எங்களிடம் உண்டு. அதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று எடுத்துரைத்தார். நியூசிலாந்து அணியின் பாதுகாப்பு அதிகாரிகளும் எங்களுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளில் திருப்தியை வெளிப்படுத்தினார்கள். கடைசி நேர விலகலால் பாகிஸ்தான் மற்றும் சர்வதேச அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.