ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஆஸி. அணி 258/7 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய நியூஸிலாந்து, 41 ஓவா்களிலேயே 187 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் 71 ரன்கள் வித்தியாசத்தில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் வென்றது ஆஸ்திரேலியா.
இந்நிலையில் கரோனா ஆபத்து காரணமாக ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள இரு ஆட்டங்களில் வேறொரு தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒருநாள் தொடருக்குப் பிறகு நியூஸிலாந்தில் நடைபெறுவதாக இருந்த டி20 தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் ஆஸ்திரேலியாவிலிருந்து நியூஸிலாந்து நாட்டுக்கு நுழைபவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்படுவார்கள் என்று நியூஸிலாந்து அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா - நியூஸிலாந்து இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நியூஸிலாந்து அரசின் அறிவிப்பினால் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூஸிலாந்து வீரர்கள் இன்று மாலை உடனடியாக நாடு திரும்புகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியீட்டுத் தேதி இதுவா?
தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்

Strong Room-ல் வாக்குப்பதிவு எந்திரங்கள்! சீல் வைத்துப் பாதுகாப்பு!

வாக்குப்பதிவு சதவிகிதம்! வியப்பதற்கு ஒன்றுமில்லை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


