மீண்டும் சிக்ஸர் மழை: 55 பந்துகளில் 158 ரன்கள் குவித்த பாண்டியா!
மும்பையில் நடைபெற்று வரும் டிஒய் படேல் டி20 போட்டியில் விளையாடி வரும் பாண்டியா, பேட்டிங்கில் அசத்தி வருகிறார்.


மும்பையில் நடைபெற்றும் வரும் உள்ளூர் டி20 போட்டியில் மீண்டும் அதிரடிச் சதம் அடித்துள்ளார் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா.
முதுகு வலி காரணமாக சமீபகாலமாக அவதிப்பட்டு வந்த ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்குக் கடந்த வருடம் அக்டோபர் மாதம் லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. 25 வயது பாண்டியா 11 டெஸ்டுகள், 54 ஒருநாள், 40 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆசியக் கோப்பைப் போட்டியின் போது ஹார்திக் பாண்டியாவுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பல ஆட்டங்களில் விளையாடவில்லை. கடந்த வருடம் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 ஆட்டங்களில் பங்கேற்ற பாண்டியா, முதுகு வலி காரணமாக இந்திய அணி அடுத்து விளையாடிய எந்தவொரு தொடரிலும் பங்கேற்கவில்லை.
சிகிச்சைக்குப் பிறகு பயிற்சியைத் தொடங்கிய ஹாா்திக் பாண்டியா, பந்துவீச்சுக்காக நடத்தப்பட்ட சோதனையில் தோ்ச்சி பெறவில்லை. இதனால் நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20, டெஸ்ட் தொடர்களில் இடம்பெறவில்லை.
இந்நிலையில் மும்பையில் நடைபெற்று வரும் டிஒய் படேல் டி20 போட்டியில் விளையாடி வரும் பாண்டியா, பேட்டிங்கில் அசத்தி வருகிறார்.
இதற்கு முன்பு 39 பந்துகளில் 105 ரன்கள் எடுத்த பாண்டியா தற்போது பாரத் பெட்ரோலியம் அணிக்கு எதிராக 55 பந்துகளை மட்டும் எதிர்கொண்டு 158 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார். இதில் 20 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடித்தார். ரிலையன்ஸ் 1 அணிக்காக விளையாடும் பாண்டியா, சதத்தை 39 ரன்களில் கடந்தார். அப்போது அவர் 14 சிக்ஸர்களும் 2 பவுண்டரிகளும் அடித்திருந்தார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகள் மோதும் ஒருநாள் தொடர் மார்ச் 12 அன்று தொடங்கவுள்ளது. இத்தொடருக்காக பாண்டியா நன்குத் தயாராகி வருவதால் இந்திய ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
மும்பை டி20 போட்டியில் பாண்டியா எடுத்த ரன்கள்
46(29)
105(39)
38(25)
158*(55)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...