கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

மகளிர் டி20 உலகக் கோப்பை: இறுதிச்சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறியது இந்திய அணி!

மழையால் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டம் ரத்தானதால், மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறியது இந்திய அணி.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:05 pm

எழில்

மழையால் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டம் ரத்தானதால், மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறியது இந்திய அணி.

ஆஸ்​தி​ரே​லி​யா​வில் நடை​பெற்று வரும் 7-ஆவது மக​ளிர் டி20 உ​ல​கக் கோப்பை போட்டி தற்​போது அரை​யி​று​திக் கட்டத்தை எட்டி​யுள்​ளது. இந்​தி​யா- இங்கிலாந்து அணி​க​ளும், மற்​றொரு அரை​யி​று​தி​யில் நடப்பு சாம்​பி​யன் ஆஸி.-​தென்​னாப்​பி​ரிக்க அணி​க​ளும் மோது​கின்​றன.     

குரூப் ஏ பி​ரி​வில் 4 ஆட்டங்​க​ளி​லும் வெற்றி கண்டு முத​லி​டத்​து​டன் அரையிறுதிக்கு தகுதி பெற்​றது இந்​தியா. குரூப் பி பி​ரி​வில் தென்னாப்பிரிக்காவு​டன் தோல்வி கண்டு மற்ற 3 ஆட்டங்​க​ளில் வென்று இரண்டாம் இடத்​து​டன் அரை​யி​று​திக்​குள் நுழைந்​துள்​ளது இங்​கி​லாந்து.

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இன்றைய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்திய அணி முதல்முறையாக மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. குரூப் ஏ பி​ரி​வில் 4 ஆட்டங்​க​ளில் வென்ற நிலை​யில், இந்​தியா நேராக இறு​திக்​குள் நுழைந்துள்ளது. 

சிட்னில் நடைபெறும் இரண்​டா​வது அரை​யி​றுதி ஆட்டத்​தில் நடப்பு சாம்​பி​யன் ஆஸ்​தி​ரே​லி​யா​வும்-​தென்​னாப்​பி​ரிக்​கா​வும் மோது​கின்​றன. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.