மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 7-ஆவது மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதிச் சுற்றில் இந்தியா- இங்கிலாந்து அணிகளும், நடப்பு சாம்பியன் ஆஸி.-தென் ஆப்பிரிக்க அணிகளும் மோதின.
மழையால் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டம் ரத்தானதால், மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றுக்கு முதல்முறையாக முன்னேறியது இந்திய அணி.
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த இன்றைய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இந்திய அணி முதல்முறையாக மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. குரூப் ஏ பிரிவில் 4 ஆட்டங்களில் வென்ற நிலையில், இந்தியா நேராக இறுதிக்குள் நுழைந்துள்ளது.
இதன்பிறகு நடைபெற்ற ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்தது. கேப்டன் லேனிங் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மழையால் ஆட்டம் தடைபட்டதால் ஓவர்கள் குறைக்கப்பட்டன. தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற, 13 ஓவர்களில் 98 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி, 13 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றது.
மார்ச் 8 அன்று மெல்போர்னில் நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம், கேரளம், தமிழகத்தில் இவர்கள் வெற்றி பெறுவர்: ஃபரூக் அப்துல்லா

இது தெரியுமா? பிளாஸ்டிக் நாற்காலியில் உட்காரும் பகுதியில் ஓட்டை இருப்பது ஏன்?

இனியாவது ஜன நாயகன் வெளியாகுமா?
இந்த வார ஓடிடி படங்கள்!
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


