அக்டோபர் 2018-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் பிராவோ. 2004-ல் அறிமுகமான பிராவோ இதுவரை 40 டெஸ்டுகள், 164 ஒருநாள், 66 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
36 வயதான பிராவோ, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். ஐபிஎல் போன்ற டி20 போட்டிகளுக்கு முக்கியத்துவம் தருவதாலும் காயங்கள் காரணமாகவும் கிரிக்கெட் சங்கத்துடனான மோதல்களாலும் அவரால் அதிகமான சர்வதேச ஆட்டங்களில் விளையாட முடியாமல் போய்விட்டது. ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் போன்ற உள்ளூர் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடப் போவதாகக் கடந்த அக்டோபர் மாதம் அவர் அறிவித்தார்.
பிறகு, கடந்த மாதம் தன்னுடைய ஓய்வு அறிவிப்பை வாபஸ் பெற்றார் பிராவோ. அதற்கான காரணத்தை அவர் கூறியதாவது:
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களால் சர்வதேச கிரிக்கெட்டுக்கு மீண்டும் வர முடிவெடுத்துள்ளேன். பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ், கேப்டன் கிரோன் பொலார்ட் ஆகியோரால் மீண்டும் அணிக்காக விளையாட ஆர்வமாக உள்ளேன். இளம் வீரர்களும் பொலார்ட், சிம்மன்ஸ், ஹோல்டர் போன்ற மூத்த வீரர்களும் அணியில் உள்ளார்கள். எனவே இந்த மாற்றங்களில் நானும் என்னுடைய பங்களிப்பை அளிக்கவுள்ளேன். மேற்கிந்தியத் தீவுகள் அணியை மீண்டும் கட்டமைத்து, தரவரிசையில் முன்னேற முடியும். என்னைத் தேர்வு செய்தபிறகு மே.இ. தீவுகளின் டி20 அணிக்கு முழு ஒத்துழைப்பை அளிப்பேன் என்று கூறினார்.
இந்நிலையில் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான மே.இ. தீவுகள் அணியில் இடம்பிடித்துள்ளார் பிராவோ.
கடைசி ஓவர்களில் அணியின் பந்துவீச்சைப் பலப்படுத்துவதற்காக பிராவோ சேர்க்கப்பட்டுள்ளார் என்று மே.இ. தீவுகள் அணியின் தேர்வுக்குழு உறுப்பினர் ரோஜர் ஹார்பர் கூறியுள்ளார். மே.இ. தீவுகள் - அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் புதன் முதல் தொடங்கவுள்ளது.
இதையடுத்து டி20 உலகக் கோப்பையில் பிராவோ விளையாடுவார் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 2012, 2016 ஆகிய ஆண்டுகளில் மே.இ. தீவுகள் அணி உலகக் கோப்பையை வென்றபோது பிராவோவும் அந்த அணியில் இடம்பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்பு!

முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் குர்பக்ஸ் சிங் கிரேவால் காலமானார்!

புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் சிந்து பைரவி தொடர்!

ஐபிஎல் 2026ல் சிறந்த எகானமி: முதலிடத்தில் சிஎஸ்கே வீரர் அகீல் ஹொசைன்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


