கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்டில், முதல் ரன்னை எடுக்க முக்கால் மணி நேரம் தடுமாறிய ஸ்டீவ் ஸ்மித்! (விடியோ)

மிகவும் கஷ்டப்பட்டு முதல் ரன்னை ஸ்மித் எடுத்தபோது ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள்...

News image
Updated On :27 ஜனவரி 2024, 3:20 pm

எழில்

நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் ஆட்டத்தில் தனது முதல் ரன்னை எடுக்க முக்கால் மணி நேரம் எடுத்துக்கொண்டார் பிரபல பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்.

இந்த டெஸ்ட் தொடரில் நீல் வாக்னர் பந்துவீச்சில் நான்கு முறை ஆட்டமிழந்த ஸ்மித், இந்தமுறை மிகவும் கவனமாக விளையாடினார். இதனால் அவர் தனது முதல் ரன்னை எடுக்க 39 பந்துகள், 46 நிமிடங்கள் ஆயின. இதுபோல முதல் ரன்னுக்காக ஸ்மித் இந்தளவுக்குத் தடுமாறியது இதுவே முதல்முறை. இதற்கு முன்பு, 2014-ல் இந்தியாவுக்கு எதிராக மெல்போர்னில் முதல் ரன்னை எடுக்க 18 பந்துகள் எடுத்துக்கொண்டார் ஸ்மித். 

மிகவும் கஷ்டப்பட்டு முதல் ரன்னை ஸ்மித் எடுத்தபோது ரசிகர்கள் ஆரவாரம் செய்தார்கள். பந்துவீச்சாளர் வாக்னர், ஸ்மித்தின் முதுகில் தட்டிக்கொடுத்தார். ஸ்மித்தும் தன்னுடைய உற்சாகத்தை ரசிகர்களிடம் பகிர்ந்துகொண்டார். பிறகு 182 பந்துகளில் 63 ரன்களில் ஆட்டமிழந்தார் ஸ்மித். 

முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் எடுத்துள்ளது. மார்னஸ் லபூஷேன் 130, வேட் 22 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.