ஐஎஸ்எல் போட்டியில், சாம்பியன் பட்டத்தை மூன்றாவது முறையாகக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது சென்னையின் எஃப்சி அணி.
இரண்டு முறை இந்திய சூப்பர் லீக் சாம்பியனான சென்னையின் எஃப்சி அணி, இந்த சீசனின் அரையிறுதி ஆட்டத்தில் எஃப்சி கோவாவுக்கு எதிராக விளையாடுகிறது. இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனைக்கு உள்ளன
அரையிறுதியில் சென்னையின் எஃப்சி உள்ளூர் ஆட்டம், பிப்ரவரி 29 அன்று சனிக்கிழமை மாலை சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட்கள் விலை ரூ. 250 முதல் விற்பனைக்கு உள்ளது.
அடுத்த ஆட்டம் கோவாவில் ஒரு வாரம் கழித்து இரு அணிகளுக்கிடையே மார்ச் 7-ம் தேதி நடைபெறும்.
ரசிகர்கள் டிக்கெட்டுகளை 'புக் மை ஷோ' செயலி வலைத்தளம் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம். இல்லாவிட்டால், ஜவஹர்லால் நேரு மைதானத்தின் கேட் 10-ல் உள்ள 'புக் மை ஷோ' பாக்ஸ் அலுவலகத்தில் பிப்ரவரி 28 வரை காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை நேரில் டிக்கெட்டுகளைப் பெறலாம்.
பிப்ரவரி 29 அன்று, அதாவது ஆட்டம் நடைபெறும் நாளன்று 'புக் மை ஷோ' பாக்ஸ் அலுவலகம், ஜவஹர்லால் நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் கேட் 1-க்கு மாற்றப்படும். அங்கு டிக்கெட்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மார்ச் 14 அன்று ஐஎஸ்எல் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பட்டம் வெல்லும் அணி 2021-இல் நடக்கவுள்ள ஏஎஃப்சி சாம்பியன்ஸ் லீக் போட்டி தொடக்க சுற்றுக்கு நேரடியாக தகுதி பெறும்.
இந்த வருடப் போட்டியில் ஒருகட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது சென்னை அணி. அதன் ரசிகர்கள் மிகவும் வெறுத்துப்போனார்கள். ஐஎஸ்எல் போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணி கடந்த 2018 சீசனில் நடப்பு சாம்பியன் அந்தஸ்தை விட்டு, கடைசி இடத்துக்குக் கீழிறங்கியது. 2019-20 சீசனில் புதிய வீரா்கள் சோ்க்கப்பட்டு அணிக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட்டது. சென்னை அணியின் பயிற்சியாளராக இருந்து ஐஎஸ்எல் பட்டம் வென்று கொடுத்த ஜான் கிரகோரி, தற்போதைய நிலைமையை உணர்ந்து பதவி விலகினார். முதல் ஆறு ஆட்டங்களில் 3-ல் தோற்று இரண்டை டிரா செய்து ஒரு வெற்றி மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்ததால் நெருக்கடி காரணமாக கிரகோரி பதவி விலகினார். அயர்லாந்து அணிக்காக விளையாடிய ஓவன் கோயல் புதிய பயிற்சியாளராகத் தேர்வானார்.
முதல் நான்கு ஆட்டங்களில் மூன்றில் தோல்வியடைந்த சென்னை அணி, அதன்பிறகு விளையாடிய 14 ஆட்டங்களில் 8-ல் வென்று அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஓர் ஆட்டம் மீதமுள்ள நிலையில் சென்னை அணி அரையிறுதிக்குத் தகுதியடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்!

யார் அனுமதி கொடுத்தது? பத்திரிகையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட துணை ஆணையர்!

உலகக் கோப்பை: ஈரானுக்குப் பதிலாக விளையாட டிரம்ப் விடுத்த அழைப்பை நிராகரித்த இத்தாலி!

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்
வீடியோக்கள்

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை


