கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான கம்பளா போட்டியில் 142.50 மீ. தூரத்தை 13.62 விநாடிகளில் கடந்து நாடு முழுக்கப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சீனிவாச கெளடா.
எருமை ஓட்டப் பந்தயப் போட்டி, கர்நாடகாவில் நவம்பர் முதல் மார்ச் வரை பல்வேறு பகுதிகளில் நடைபெறும். சேறு நிரம்பியிருக்கும் வயல் பகுதிகளில் எருமைகளை வண்டிகளில் பூட்டி, அதன்பின்னே விவசாயிகளும் ஓடுவார்கள். இந்நிலையில், கர்நாடகாவில் சமீபத்தில் நடைபெற்ற கம்பளா போட்டியில் 142.50 மீ. தூரத்தை 13.62 விநாடிகளில் கடந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் 28 வயது சீனிவாச கெளடா.
பிரபல ஓட்டப் பந்தய வீரர் உசைன் போல்ட், 100 மீ. ஓட்டத்தை 9.58 விநாடிகளில் ஓடி உலக சாதனை செய்துள்ளார். இதன்மூலம் உசைன் போல்ட்டை விடவும் வேகமாக சீனிவாச கெளடா ஓடியுள்ளதாக (100 மீ. ஓட்டத்தை 9.55 விநாடிகளில் கடந்துள்ளார்) கர்நாடக விளையாட்டு ரசிகர்கள் பரவசம் அடைந்துள்ளார்கள்.
தக்ஷினா கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்த கெளடா, கடந்த ஏழு வருடங்களாக கம்பளா போட்டியில் பங்கேற்று வருகிறார். என்னை உசைன் போல்டுடன் ஒப்பிடுகிறார்கள். அவர் உலக சாம்பியன். நான் வயல்வெளிகளில் ஓடுபவன் எனப் பேட்டியளித்துள்ளார் கெளடா.
உசைன் போல்ட்டுடன் ஒப்பிட்டு கெளடாவின் சாதனைகள் ஊடகங்கள் வெளியானதையடுத்து, மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை இணையமைச்சா் கிரண் ரிஜிஜு, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார். சாய் விளையாட்டு அமைப்பின் பயிற்சியாளர்களைக் கொண்டு கெளடாவின் திறமையைப் பரிசோதனை செய்து பயிற்சி அளிக்கவுள்ளோம். இந்தியாவின் எந்தவொரு திறமையும் வீணாக விடமாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.
வேகமான ஓட்டம் மட்டுமல்லாமல் ஒரு தடகள வீரருக்கான உடற்கட்டும் கெளடாவுக்கு அமைந்துள்ளதையும் பலரும் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்கள். தனது வலுவான சிக்ஸ் பேக் பாணியிலான உடற்கட்டின் ரகசியம் குறித்து கெளடா பேட்டியளித்ததாவது:
சிறிய வயதிலிருந்து எனக்கு வலுவான உடற்கட்டு இருந்ததால் கம்பளா விளையாட்டில் நான் ஈடுபடவேண்டும் என அக்கம்பக்கத்தினர் கூறினார்கள். அப்படித்தான் நான் கம்பளா அகாடமியில் சேர்ந்து, இந்த விளையாட்டில் ஈடுபடுவது குறித்துக் கற்றுக்கொண்டேன். 12 நிகழ்ச்சிகளில் நடைபெற்ற 35 பந்தயங்களை நான் வென்றுள்ளேன். விடியோ, புகைப்படங்கள் பார்த்து என்னுடைய சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கான ரகசியம் குறித்துக் கேட்கிறீர்கள். நான் ஜிம்முக்குச் சென்றது கிடையாது. காலையில் கஞ்சி குடிப்பேன். மதியம் மீனும் இரவு உணவுக்கு சிக்கனும் சாப்பிடுவேன். மீன் கட்டாயம் உணவில் இருக்கவேண்டும். நான் வலுவாகவும் நல்ல உடற்கட்டுடனும் இருப்பதற்குக் காரணம் மீன் தான் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தலைவர்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்
சூரியின் மண்டாடி படப்பிடிப்பு நிறைவு! சிறப்பு விடியோ!

தலைவர்கள், பிரபலங்கள் வாக்களிப்பு - புகைப்படங்கள்

சாய் சுதர்சன் அதிரடி சதம்: பெங்களூருக்கு 206 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


