அதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

பாக்ஸிங் டே டெஸ்ட் மெல்போர்னில் நடைபெறும்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா நம்பிக்கை

ரசிகர்களால் மைதானத்துக்கு வர முடியும் என்றால் மெல்போர்னிலேயே பாக்ஸிங் டே டெஸ்ட் நடைபெறும் என...

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:05 pm

DIN

இந்த வருடம் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் பாக்ஸிங் டே மெல்போனில் நடைபெறும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

2020-21 சீஸனுக்காக அட்டவணையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா இரு மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. டிசம்பர் 3 முதல் ஜனவரி 7 வரை இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின்னர் ஜனவரி மாதம்  3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த அட்டவணைகள் மாறுதலுக்கு உட்பட்டவை என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. 

பாக்ஸிங் டே டெஸ்ட் (டிசம்பர் 26 முதல் 30 வரை) இந்த முறை மெல்போர்னுக்குப் பதிலாக அடிலெய்டில் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த வாரம் நடைபெறுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூட்டத்தில் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. விக்டோரியா மாநிலத்தில் கரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ளதால் இந்த மாற்றம் ஏற்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் பாக்ஸிங் டே மெல்போனில் நடைபெறும் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா நம்பிக்கை தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் தற்காலிகத் தலைமைச் செயல் அதிகாரி நிக் ஹாக்லி கூறியதாவது:

விக்டோரியாவில் விரைவில் சகஜ நிலைமை திரும்பும் என எதிர்பார்க்கிறோம். எனவே பாக்ஸிங் டே டெஸ்ட்டை மெல்போர்னில் நடத்துவதற்கான ஏற்பாடு நடைபெற்று வருகின்றன. ரசிகர்களால் மைதானத்துக்கு வர முடியும் என்றால் மெல்போர்னிலேயே பாக்ஸிங் டே டெஸ்ட் நடைபெறும் என அவர் கூறியுள்ளார். 

இந்திய அணியின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம்

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட்: டிசம்பர் 3-7, பிரிஸ்பேன்

2-வது டெஸ்ட்: டிசம்பர் 11-15, அடிலெய்ட் (பகலிரவு)

3-வது டெஸ்ட்: டிசம்பர் 26-30, மெல்போர்ன்

4-வது டெஸ்ட்: ஜனவரி 3-7, சிட்னி

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள்: ஜனவரி 12, பெர்த்

2-வது ஒருநாள்: ஜனவரி 15, மெல்போர்ன்

3-வது ஒருநாள்: ஜனவரி 17, சிட்னி
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.