கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்: அடிலெய்டுக்கு மாற்றப்படும் பாக்ஸிங் டே டெஸ்ட்!

மெல்போர்னுக்குப் பதிலாக அடிலெய்டில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட்...

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:04 pm

DIN

மெல்போர்னுக்குப் பதிலாக அடிலெய்டில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

2020-21 சீஸனுக்காக அட்டவணையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா இரு மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. டிசம்பர் 3 முதல் ஜனவரி 7 வரை இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின்னர் ஜனவரி மாதம்  3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த அட்டவணைகள் மாறுதலுக்கு உட்பட்டவை என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் பாக்ஸிங் டே டெஸ்ட் (டிசம்பர் 26 முதல் 30 வரை) இந்த முறை மெல்போர்னுக்குப் பதிலாக அடிலெய்டில் நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த வாரம் நடைபெறுள்ள கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூட்டத்தில் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. விக்டோரியா மாநிலத்தில் கரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ளதால் இந்த மாற்றம் ஏற்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

இந்திய அணியின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம்

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட்: டிசம்பர் 3-7, பிரிஸ்பேன்

2-வது டெஸ்ட்: டிசம்பர் 11-15, அடிலெய்ட் (பகலிரவு)

3-வது டெஸ்ட்: டிசம்பர் 26-30, மெல்போர்ன்

4-வது டெஸ்ட்: ஜனவரி 3-7, சிட்னி

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள்: ஜனவரி 12, பெர்த்

2-வது ஒருநாள்: ஜனவரி 15, மெல்போர்ன்

3-வது ஒருநாள்: ஜனவரி 17, சிட்னி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.