கரோனா விழிப்புணர்வு தொடர்பாக சச்சின், தோனி, கோலி, விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட விளையாட்டுப் பிரபலங்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 53,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 2500 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர், தோனி, விராட் கோலி, கங்குலி, சேவாக் உள்ளிட்ட 49 விளையாட்டுப் பிரபலங்களுடன் காணொலி காட்சி முறையில் ஒரு மணி நேரம் கலந்துரையாடினார் பிரதமர் மோடி. கிரிக்கெட் பிரபலங்கள் மட்டுமல்லாமல் விஸ்வநாதன் ஆனந்த், பி.வி. சிந்து, அபிஷேக் வர்மா, அஞ்சு பாபி ஜார்ஜ் உள்ளிட்ட இதர விளையாட்டுப் பிரபலங்களுடனும் உரையாடிய மோடி, கரோனா பாதிப்பிலிருந்து காத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வை மக்களுக்குத் தெரியப்படுத்துமாறு பிரபலங்களிடம் வேண்டுகோள் விடுத்தார். குறைந்த நேரமே இருந்ததால் மோடியுடன் 9 வீரர்கள் மட்டுமே உரையாட முடிந்தது. விளையாட்டு வீரர்களும் அரசின் நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வருமான வரித் துறை சோதனை உண்மைதான்! இன்று ஆதாரங்களை வெளியிடுகிறார் செல்வப்பெருந்தகை!

எஸ்ஐஆா் பணிகளாலும் வாக்குப்பதிவு அதிகரிப்பு!

வாக்கு சதவிகிதம் அதிகரிப்பா? தலைமைத் தேர்தல் ஆணையரின் நகைச்சுவை: திமுக

அதிருப்திக்கு மத்தியிலும் நரிக்குறவா்கள் ஆா்வமுடன் வாக்களிப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


