நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

கடந்த பத்தாண்டுகளில் இவரே மிகச்சிறந்த இந்திய ஃபீல்டர்: பயிற்சியாளர் பாராட்டு

இந்திய அணியில், ஜடேஜாவே மிகச்சிறந்த ஃபீல்டர் என இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:33 am

எழில்

இந்திய அணியில், ஜடேஜாவே மிகச்சிறந்த ஃபீல்டர் என இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர். ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: ஆடுகளத்தில் ஜடேஜாவின் ஃபீல்டிங் இந்திய அணியின் நம்பிக்கையை உயர்த்துகிறது. அவருடைய ஃபீல்டிங்கினால் எதிரணி வீரர்களை உஷாராக இருக்க வைப்பார். ஆடுகளத்தில் தன்னுடைய ஃபீல்டிங்கினால் தாக்கத்தை ஏற்படுத்துவார். கடந்த பத்தாண்டுகளில் ஜடேஜாவே இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபீல்டர் என்று ஜடேஜாவைப் பாராட்டியுள்ளார். மேலும் இந்திய அணியின் ஃபீல்டிங் குறித்து ஸ்ரீதர் கூறியதாவது:

இந்திய அணியில் உடற்தகுதி மற்றும் மனநிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தினோம். இந்திய அணியின் ஃபீல்டிங் குறித்த எதிரணியின் கருத்து சமீபகாலமாக மாறியுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணியின் ஃபீல்டிங் ஆதிக்கம் செலுத்தியது குறித்து அந்த அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் பாராட்டியுள்ளார். உலகக் கோப்பைப் போட்டியின்போதும் எதிரணிகள் இந்திய அணியின் ஃபீல்டிங் குறித்து உயர்வாகப் பேசின. தற்போதைய வீரர்களில் ஜடேஜா, கோலி, மார்டின் கப்தில், மேக்ஸ்வெல் ஆகியோர் சிறந்த ஃபீல்டர்கள் எனக் கூறுவேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.