மிஸ்பா உல் ஹக்கின் ஓய்வுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட சர்ஃபராஸ் அகமது, தற்போது பாகிஸ்தான் அணியின் டெஸ்ட், டி20 அணிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து பாகிஸ்தானின் ஒருநாள், டி20 அணிகளுக்குப் புதிய கேப்டன்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அஸார் அலி டெஸ்ட் கேப்டனாகவும், பாபர் அஸாம் டி20 கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அஸார் அலி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிகிற வரைக்கும் கேப்டனாக நீடிப்பார். பாபர் அஸாம், டி20 உலகக் கோப்பை வரை டி20 அணியின் கேப்டனாக நீடிப்பார். ஒருநாள் அணிக்கான கேப்டனை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை.
நவம்பர் - டிசம்பரில் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்கிறது. அங்கு 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது. மேலும், பாகிஸ்தானுக்குச் சென்ற அனுபவமில்லா இலங்கை அணி, நெ.1 டி20 அணியான பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணிலேயே 3-0 என வீழ்த்தி டி20 தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து அந்த அணியில் இந்த அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
13 டெஸ்டுகளுக்கு கேப்டனாக இருந்த சர்ஃபராஸ் அகமது, 4 வெற்றிகள், 8 தோல்விகளை அடைந்துள்ளார். அவர் தலைமையில் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் கோப்பையை வென்று, நெ.1 டி20 அணியாகவும் திகழ்ந்துள்ளது. 2020 ஜூலையில் தான் பாகிஸ்தான் அணி நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கிறது. அப்போது பாகிஸ்தான் அணியின் புதிய ஒருநாள் அணி கேப்டன் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்து முடிந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றின் முடிவில் 5-ம் இடம் பிடித்து வெளியேறியது. இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தேர்வுக் குழு தலைவர் பொறுப்பிலிருந்து முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக் விலகினார். பிறகு, தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து மிக்கி ஆர்தரை நீக்கியது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். மேலும் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் பிளவர், பந்துவீச்சுப் பயிற்சியாளர் அஸார் முகமது, டிரெய்னர் கிராண்ட் லுடென் ஆகியோருடைய ஒப்பந்தத்தையும் புதுப்பிக்க மறுத்தது. பிறகு, மூத்த வீரர்களான சோயிப் மாலிக், முகமது ஹபீஸ் ஆகிய இரு வீரர்களுக்கும் ஒப்பந்தம் மறுக்கப்பட்டது. 2019-20-ம் ஆண்டுக்கான ஒப்பந்தப் பட்டியலில் இரு வீரர்களின் பெயர்களும் இடம்பெறவில்லை. இதையடுத்து, கடந்த மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தேர்வானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


