ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இந்தியா vs மே.இ. தீவுகள்: டிசம்பர் 6 டி20 ஆட்டம் மும்பையிலிருந்து ஹைதராபாத்துக்கு மாற்றம்

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 சர்வதேச ஆட்டம், டிசம்பர் 6 அன்று மும்பையில் நடைபெறும்படி...

News image
Updated On :23 நவம்பர் 2019, 6:18 am

இந்தியாவில் மே.இ.தீவுகள் அணி சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஆட்டங்கள் கொண்ட டி20, ஒரு நாள் தொடா்களில் பங்கேற்கிறது. இந்தத் தொடர்களுக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 சர்வதேச ஆட்டம், டிசம்பர் 6 அன்று மும்பையில் நடைபெறும்படி அட்டவணையைத் தயாரித்திருந்தது பிசிசிஐ. ஆனால், 1992 டிசம்பர் 6 அன்று உத்தரப் பிரதேசத்தில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் அன்றைய தினம் பாபர் மசூதி இடிப்பு நினைவு தினமாக ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படுகிறது. டிசம்பர் 6 அன்று, இந்தியா முழுக்க எவ்வித அசம்பாதவிதச் சம்பவங்களும் நேராமல் தடுப்பதற்கும், அமைதியை உறுதிசெய்யவும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து மாநில அரசுகளும் மேற்கொள்கின்றன. 

இந்நிலையில் இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் டிசம்பர் 6 அன்று மும்பையில் நடைபெற்றால் அதற்கு உரிய பாதுகாப்பு வழங்க இயலாது என மும்பைக் காவல்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து மூன்றாவது டி20 நடைபெறுவதாக இருந்த ஹைதராபாத்துக்கு முதல் டி20 ஆட்டத்தையும் மும்பைக்கு மூன்றாவது டி20 ஆட்டத்தையும் ஒதுக்கியுள்ளது பிசிசிஐ. இந்தப் புதிய மாற்றத்தின்படி, இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் டிசம்பர் 6 அன்று ஹைதராபாத்திலும் டிசம்பர் 11 அன்று மும்பையில் 3-வது டி20 ஆட்டமும் நடைபெறவுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.