இந்திய அணி கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன்முறையாக பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்கிறது. பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியின் தீவிர முயற்சியால் கொல்கத்தாவில் நடத்தப்படும் இந்த ஆட்டத்தில் வங்கதேச அணியுடன் மோதுகிறது இந்தியா. இந்த ஆட்டத்தில் இளஞ்சிவப்பு (பிங்க்) நிற பந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்தியா-வங்கதேசம் இடையே நடைபெறவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட்டுக்காக முதல் 3 நாள்கள் டிக்கெட்டுகள் முழுமையாக விற்று விட்டன என கங்குலி கூறியுள்ளாா். பகலிரவு டெஸ்ட் ஆட்டத்துக்காக கொல்கத்தா நகரமே பிங்க் நிறமாக மாறியுள்ளது. மைதானம் அருகே பெரிய ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டுள்ளது.
2015-இல் அடிலெய்டில் ஆஸ்திரேலியா-நியூஸிலாந்து இடையே நடைபெற்ற முதல் பகலிரவு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளில் இந்தியா, வங்கதேசம் தவிர மற்ற அணிகள் அனைத்தும் பகலிரவு டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்ற அனுபவத்தை கொண்டுள்ளன. இதுவரை உலகம் முழுவதும் 11 பகலிரவு டெஸ்ட் ஆட்டங்கள் நடந்துள்ளன.
டாஸ் வென்ற வங்கதேச கேப்டன், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றங்கள் எதுவும் இல்லை. வங்கதேச அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, கங்குலி, டெண்டுல்கர், டிராவிட், லக்ஷ்மண், ஹர்பஜன் சிங், அகர்கர் என பிரபலங்கள் இந்த வரலாற்றுத் தருணத்தில் பங்கேற்றுள்ளார்கள். வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனா, மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி ஆகியோரிடம் இரு அணி வீரர்களும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இந்த நிகழ்வில் பங்கேற்ற சச்சின் டெண்டுல்கருக்கு ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தார்கள். ராணுவ பேண்ட் வீரா்களால் இரு அணிகளின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன.
மதிய உணவு இடைவேளையின்போது, சச்சின், கங்குலி, லக்ஷ்மண், டிராவிட், கும்ப்ளே ஆகியோர் 2001 கொல்கத்தா டெஸ்ட் குறித்து தங்களுடைய நினைவுகளைக் கூறுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரலாறு படைத்த மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணி!

யூகோ வங்கியின் லாபம் 23% உயர்வு!

கல்பாக்கம் அதிவேக ஈனுலை நாட்டின் அணுசக்திப் பயணத்தில் ஒரு மைல்கல்: மோடி பாராட்டு!

ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 159 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


