UFC அதாவது அல்டிமேட் ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் என்பது மிக்ஸ்டு மார்சியல் ஆர்ட்ஸ் என்று சொல்லப்படக்கூடிய ரெஸ்லிங், பாக்ஸிங், கிக் பாக்ஸிங், ஜூடோ, கராத்தே இவை அத்தனையையும் ஒரு சேரப் பயன்படுத்தி ஆடக்கூடிய ஒரு வகை ஃபைட்டிங் சாம்பியன்ஷிப் கேம்களை ஊக்கப்படுத்தக் கூடிய ஒரு நிறுவனம். சுருக்கமாகச் சொல்வதென்றால் WWF ரெஸ்லிங் ஃபைட்டர் கேம் போல என்று வைத்துக் கொள்ளுங்கள். இதில் அண்டர்டேக்கர், ராக் உள்ளிட்டோர் எப்படி சர்வதேச அளவில் கொண்டாடப்படுகிறார்களோ அப்படி UFC சாம்பியன்ஷிப் விளையாட்டுகளின் சூப்பர் ஸ்டாராகத் திகழக்கூடியவர் கனோர் மெக் கிரிகோர். ரசிகர்கள் இவர் கலந்து கொள்ளும் ஃபைட்டர் சாம்பியன்ஷிப் ஷோக்களைக் காண பேராவலுடன் காத்திருக்க இவரோ திடீரென சமூக வலைத்தளத்தில் இனிமேல் தான் UFC சாம்பியன்ஷிப் ஷோக்களில் ஆடப்போவதில்லை என்றும் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்திருக்கிறார்.