பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாட்டின் உறவுகளை துண்டிக்க வேண்டும் என்ற பிசிசிஐயின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்துள்ளது.
புல்வாமா தாக்குதல் எதிரொலியாக, உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு பாதுகாப்பு தர வேண்டும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாட்டின் உறவுகளை துண்டிக்க வேண்டும் என வலியுறுத்தி பிசிசிஐ சிஓஏ தலைவர் வினோத் ராய் ஐசிசிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஐசிசி தலைவர் ஷசாங் மனோகர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "இந்திய அணியின் பாதுகாப்புக்கு ஐசிசி மிகுந்த முன்னுரிமை தரும். பிசிசிஐ கடிதத்தை படித்தேன். பாதுகாப்புக்கு மிகுந்த முன்னுரிமை தருவோம். வரும் மார்ச் 2-ஆம் தேதி துபையில் நடக்க உள்ள ஐசிசி குழுக் கூட்டத்தில் பாதுகாப்பு திட்டங்களை பிசிசிஐ நிர்வாகிகளிடம் தெரிவிப்போம். அது அவர்களுக்கு திருப்தி தரும்" என்றார் மனோகர்.
இந்நிலையில், ஐசிசி குழுக் கூட்டம் துபையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது. ஆனால், இந்த கூட்டத்தில் பிசிசிஐயின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக பிசிசிஐ அதிகாரி தெரிவித்தார்.
இதுதொடர்பாக, அவர் தெரிவித்ததாவது,
"இந்த கோரிக்கையை தற்போதைய சூழலில் செயல்படுத்த முடியாது என்பதை ஐசிசி தெளிவுபடுத்தியது. அதேசமயம், உலகக் கோப்பையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஐசிசி ஏற்றுக்கொண்டது" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


