டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

இந்திய அணியில் விஜய் சங்கர் நீக்கம்: இங்கிலாந்து அரையிறுதிக்கு செக்?

இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறுவோமோ அல்லது வெளியேற்றப்படுவோமா என்ற தடுமாற்றத்தில் உள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:23 am

Raghavendran

2019 உலகக் கோப்பை தொடரில் பர்மிங்ஹாமில் இந்தியாவுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள முக்கிய ஆட்டத்தில் மோதும் இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு முன்னேறுவோமோ அல்லது வெளியேற்றப்படுவோமா என்ற தடுமாற்றத்தில் உள்ளது.

போட்டி தொடங்கும் முன்பு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் அணியாக கருதப்பட்ட இங்கிலாந்து, எதிர்பாராமல் பெற்ற 3 தோல்விகளால் திடீரென அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

அதே நேரத்தில் இந்தியா தொடர்ந்து 5 ஆட்டங்களில் வென்று பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்னும் 1 வெற்றி பெற்றாலே அரையிறுதிக்கு முன்னேறி விடும். மேலும் ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தையும் இந்தியாவிடம் பறிகொடுத்து விட்டது இங்கிலாந்து.

இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் முதல் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில் இந்திய அணியில் விஜய் சங்கர் நீக்கப்பட்டு ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளார். இரு அணிகளின் விவரம் பின்வருமாறு:

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.