டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கொடுத்த வாய்ப்பை கோட்டை விட்டால்..! கொட்டித் தீர்க்கும் ரோஹித்

கொடுக்கும் வாய்ப்பை எதிரணியினர் கோட்டை விட்டால் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா ரன் மழையை கொட்டித் தீர்த்து விடுகிறார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:25 am

Raghavendran

கொடுக்கும் வாய்ப்பை எதிரணியினர் கோட்டை விட்டால் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா ரன் மழையை கொட்டித் தீர்த்து விடுகிறார்.

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் 4 சதங்கள் விளாசி, 500 ரன்களுக்கு மேல் குவித்து ரோஹித் ஷர்மா பல சாதனைகளைப் படைத்து வருகிறார். 

இந்நிலையில், நடப்பு தொடரின் 4 ஆட்டங்களில் ரோஹித் ஷர்மா எளிதாக அளிக்கும் கேட்ச் வாய்ப்பை எதிரணியினர் பயன்படுத்தத் தவறி கோட்டை விட்டால், அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி ரன்களைக் குவித்து வருகிறார். சிக்ஸர்களும், பவுண்டரிகளுமாக கொட்டித் தீர்க்கிறார். 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் 1 ரன் எடுத்திருந்தபோது அளித்த எளிய வாய்ப்பை அந்த அணியினர் நழுவ விட்டதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் குவித்தார்.

2 ரன்களில் அளித்த எளிய கேட்ச் வாய்ப்பை ஆஸ்திரேலிய அணி நழுவ விட பின்னர் 57 ரன்கள் சேர்த்தார்.

இங்கிலாந்து அணி 4 ரன்கள் இருந்தபோது அளித்த வாய்ப்பை பயன்படுத்தத் தவறியதில் பின்னர் 102 ரன்கள் குவிக்க காரணமாக அமைந்தது.

9 ரன்கள் இருந்தபோது வங்கதேச அணி மிக எளிய கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டதில் 104 ரன்களை விளாசித் தள்ளினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.