அரைசதம் கடந்த ரோஹித், தவன் ஜோடி புது சாதனை
நியூஸிலாந்துக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித், தவன் ஆகியோர் அரைசதம் கடந்தனர்.


நியூஸிலாந்து சென்றுள்ள இந்திய 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. நேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றிபெற்றது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-ஆவது ஒருநாள் ஆட்டம் பே ஓவல், மௌன்ட் மௌங்கானுய் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஜோடி ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினர். இருவரும் அரைசதம் கடந்த நிலையில், முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்து தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
இது ஒருநாள் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவுக்கு 38-ஆவது மற்றும் ஷிகர் தவனுக்கு 27-ஆவது அரைசதங்கள் ஆகும்.
ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு அதிக 100 ரன்கள் சேர்த்த ஜோடிகளின் விவரம் பின்வருமாறு:
சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி - 26
ரோஹித் ஷர்மா, விராட் கோலி - 15
ரோஹித் ஷர்மா, ஷிகர் தவன் - 14
சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் - 13
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...