கோலி, தோனி, ராகுல் அதிரடி: ஆஸி.க்கு கடின வெற்றி இலக்கு!
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டி20 ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது.


இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டி20 ஆட்டம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் புதன்கிழமை நடைபெறுகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்தது. கேப்டன் விராட் கோலி, ராகுல் மற்றும் தோனி ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
கோலி 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ராகுல் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 47 ரன்களும், தோனி 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 40 ரன்களும் விளாசினர்.
டி20 போட்டிகளில் விராட் கோலி 20-ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். தோனி 50 சிக்ஸர்களை நிறைவு செய்தார்.
இதையடுத்து 191 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...