வாஷிங்டன்: ஆடுகளத்தில் கூடைப்பந்தாட்ட வீரர் ஒருவரின் ஷு பிளந்து கொண்டதால் அதைத் தயாரித்த நைக் நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் விலை சரிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உலக அளவில் விளையாட்டுப் பொருட்கள், உடைகள் மற்றும் உபகரணங்கள் தயாரிப்பதில் நைக் ஒரு முன்னணி நிறுவனமாகும். அந்த நிறுவனமானது பல்வேறு விளையாட்டுகள் சார்ந்த வீரர்களைத் தனது பொருட்களுக்கு விளம்பரத் தூதுவர்களாகவும் பயன்படுத்தி வருகிறது. அத்துடன் பல அணிகளுக்குத் தேவையான பொருட்களை வழங்கும் ஒப்பந்தமும் பெற்றுள்ளது.
அந்த வகையில் அமெரிக்காவின் புகழ்பெற்ற கூடைப்பந்தாட்ட அணியான டியூக்கிற்கு ஷு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை நைக் நிறுவனம்தான் வழங்கி வருகிறது.
இந்நிலையில் ஆடுகளத்தில் கூடைப்பந்தாட்ட வீரர் ஒருவரின் ஷு பிளந்து கொண்டதால் அதைத் தயாரித்த நைக் நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் விலை சரிந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
புதன்கிழமை மாலை ட்யூக் அணிக்கும் வடக்கு கரோலினா அணிக்கும் இடையேயான முக்கியயமான போட்டி ஒன்று நடந்தது. இதில் ஆட்டம் துவங்கிய ஒரு நிமிடத்தில் ட்யூக் அணியின் வீரர் ஜியோன் வில்லியம்சன் பந்துடன் விளையாடாத துவங்கிய உடனே அவரது காலில் அணிந்திருந்த நைக் PG2.5 வகை ஷுவானது இரண்டாக பிளந்து கொண்டது. இதனால் அவர் ஆடுகளத்திலேயே தடுமாறி விழுந்தார். அத்துடன் அவருக்கு காயமும் உண்டானது. இந்த விடியோ இணையத்தில் வைரலாகப் பரவியது.
இதனால் அதிர்ச்சியடைந்த டியூக் நிறுவனம் உடனடியாக இதுகுறித்து விசாரிப்பதாக அறிவித்தது. இருந்தபோதிலும் தகவல் வெளியான பின்னர் சந்தையில் நைக் நிறுவனத்தின் பங்கு விலைகள் சுமார் 1 சதவீதத்திக்ரு மேலாக சரிந்த து,.
கடந்த ஆண்டும் அந்நிறுவனம் இதே போல ஒரு சரிவைச் சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
ராகவ் சத்தாவுக்கு 60 எம்எல்ஏ-க்கள் ஆதரவா? பரபரப்பில் பஞ்சாப் அரசியல் களம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


