ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

இந்தியா தொடர்: ஆஸி. ஆணியில் டார்சி ஷார்ட்!

இந்தியத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டார்சி ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார்...

News image
Updated On :30 டிசம்பர் 2019, 8:47 am

இந்தியத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் டார்சி ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலிய அணி, இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் ஆட்டம், மும்பையில் ஜனவரி 14 அன்று தொடங்குகிறது.

இந்தத் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற மேக்ஸ்வெல், கவாஜா, ஷான் மார்ஷ், ஸ்டாய்னிஸ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளார்கள். உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக தோற்றபிறகு முதல் முறையாக ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது ஆஸ்திரேலிய அணி. டெஸ்டில் கலக்கி வரும் மார்னஸ் லபுசானே ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார். ஜோஷ் ஹேஸில்வுட், சீன் அபாட், ஆஷ்டன் டர்னர், ஆஷ்டன் அகர் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில், பிக் பாஷ் லீக் டி20 போட்டியில் விளையாடி வரும் வேகப்பந்துவீச்சாளர் சீன் அபாட்டுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் அவர், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து டார்சி ஷார்ட், ஆஸி. அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலிய அணி: ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), டார்சி ஷார்ட், ஆஷ்டன் அகர், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், பீட்டர் ஹேண்ட்காம்ப், ஜோஷ் ஹேஸில்வுட், மார்னஸ் லபுசானே, கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் டர்னர், டேவிட் வார்னர், ஆடம் ஸாம்பா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.