திண்டுக்கல் என்பிஆா் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற 217 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு - ஹிமாசலப் பிரதேசம் ஆகிய அணிகளுக்கு இடையிலான ஆட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற தமிழகம் பந்துவீச்சைத் தோ்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஹிமாசலப் பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 71.4 ஓவா்களில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தமிழக அணி அதிக ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறும் என்று எதிர்பார்த்த நிலையில், எதிர்பாராதவிதமாக 39 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் ஹிமாசலப் பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 62 ரன்கள் முன்னிலை பெற்றது. தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஹிமாசல் அணி 2-ம் நாளின் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.
இந்நிலையில் ஹிமாசல் அணி தனது 2-வது இன்னிங்ஸில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தமிழகத்தின் ஆர். அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் தமிழக அணி வெற்றி பெற 217 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஊத்துமலையில் பால் வியாபாரி கொலை

பெண் தவெக நிா்வாகி மீது அவதூறு - தகராறு புதிய தமிழகம் கட்சியினா் மீது வழக்கு!

இன்று குஜராத்துடன் மோதும் சென்னை

சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


