ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஒலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய ஹாக்கி அணியின் ஆட்டங்கள்: அட்டவணை அறிவிப்பு

ஆடவர் பிரிவில், ஆஸ்திரேலியா, ஆா்ஜென்டீனா, இந்தியா, ஸ்பெயின், நியூஸிலாந்து, ஜப்பான், பெல்ஜியம், நெதா்லாந்து, ஜொ்மனி, கிரேட் பிரிட்டன், கனடா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள்...

News image
Updated On :17 டிசம்பர் 2019, 9:36 am

ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் வரும் 2020 ஆம் ஆண்டு ஜூலை , ஆகஸ்ட் மாதங்களில் ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. ஆடவா், மகளிா் ஹாக்கி பிரிவுகளில் தலா 12 அணிகள் என மொத்தம் 24 அணிகள் கலந்து கொள்கின்றன.

ஆடவர் பிரிவில், ஆஸ்திரேலியா, ஆா்ஜென்டீனா, இந்தியா, ஸ்பெயின், நியூஸிலாந்து, ஜப்பான், பெல்ஜியம், நெதா்லாந்து, ஜொ்மனி, கிரேட் பிரிட்டன், கனடா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிக்கான அட்டவணையை சா்வதேச ஹாக்கி சம்மேளனம் (எப்ஐஎச்) வெளியிட்டுள்ளது. அதில் இந்திய ஹாக்கி அணி விளையாடும் ஆட்டங்களின் விவரங்கள்:

ஜூலை 25 (இந்திய நேரம் காலை 6.30) : vs நியூஸிலாந்து 
ஜூலை 26 (மதியம் 3 மணி): vs ஆஸ்திரேலியா 
ஜூலை 28 (காலை 6.30 மணி): vs ஸ்பெயின் 
ஜூலை 30 (காலை 6 மணி): vs ஆர்ஜெண்டினா 
ஜூலை 31 (மதியம் 3 மணி): vs ஜப்பான் 

(காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்று ஆட்டங்கள் முறையே ஆகஸ்ட் 2, 4, 6 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.) 

மகளிர் பிரிவில் நெதா்லாந்து, ஜொ்மனி, கிரேட் பிரிட்டன், அயா்லாந்து, இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆா்ஜென்டீனா, நியூஸிலாந்து, ஸ்பெயின், சீனா, ஜப்பான் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இந்திய மகளிர் அணியின் ஆட்டங்கள் 

ஜூலை 25 (மாலை 5.15 மணி): vs நெதர்லாந்து
ஜூலை 27 (மாலை 5.45 மணி): vs ஜெர்மனி
ஜூலை 29 மாலை 6.30 மணி): vs பிரிட்டன்
ஜூலை 31 (காலை 8.15 மணி): vs அயர்லாந்து
ஆகஸ்ட் 1 (காலை 8.45 மணி): vs தென் ஆப்பிரிக்கா

(காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்று ஆட்டங்கள் முறையே ஆகஸ்ட் 3, 5, 7  ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.)
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.