ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

வடகிழக்கில் பதற்றம்: காலி மைதானத்தில் நடக்கவுள்ள ஐஎஸ்எல் கால்பந்து ஆட்டம்!

குவாஹாட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைட்டட் எஃப்.சி மற்றும் பெங்களூரு எஃப்.சி. ஆகிய அணிகளுக்கு இடையிலான ஐஎஸ்எல் கால்பந்து ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

News image
Updated On :17 டிசம்பர் 2019, 8:58 am

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டன. இதற்கு அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் எதிா்ப்பு தெரிவித்து போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

குவாஹாட்டியில் சென்னையின் எஃப்சி-நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வியாழக்கிழமை இரவு இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தொடா் பதற்றம் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக ஐஎஸ்எல் நிா்வாகம் அறிவித்தது.

குவாஹாட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைட்டட் எஃப்.சி மற்றும் பெங்களூரு எஃப்.சி. ஆகிய அணிகளுக்கு இடையிலான ஐஎஸ்எல் கால்பந்து ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலி மைதானத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டட் எஃப்.சி மற்றும் பெங்களூரு எஃப்.சி. ஆகிய இரு அணிகளும் விளையாடவுள்ளன. நகர நிர்வாகிகளின் ஆலோசனைப்படி, ஐஎஸ்எல் போட்டியை நடத்தும் ஃபுட்பால் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் லிமிடெட் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.