நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

ஸ்ரேயஸ் ஐயர் 4-ம் நிலை வீரராக விளையாட வேண்டும்: கும்ப்ளே விருப்பம்

ஒருநாள் தொடர் குறித்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான அனில் கும்ப்ளே, ஒரு பேட்டியில் கூறியதாவது...

News image
Updated On :31 ஜனவரி 2024, 1:31 pm

எழில்

டி20, ஒருநாள் தொடா்களில் பங்கேற்பதற்காக மே.இ.தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என கைப்பற்றியது இந்தியா. இதன் தொடா்ச்சியாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் சென்னையில் வரும் 15-ஆம் தேதி தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் முதல் ஆட்டம் நடைபெறவுள்ளது. 18-ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இரண்டாவது ஆட்டமும், 22-இல் கட்டாக்கில் மூன்றாவது ஆட்டமும் நடக்கிறது.

ஒருநாள் தொடர் குறித்து முன்னாள் வீரரும் கிரிக்கெட் நிபுணருமான அனில் கும்ப்ளே, ஒரு பேட்டியில் கூறியதாவது:

சவாலான மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களிடம் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கவேண்டும். அவர்கள் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள். ஆடுகளமும் அதற்குச் சாதகமாக இருக்கும். 

ஸ்ரேயஸ் ஐயரின் திறமையை நாம் பார்த்துள்ளோம். அவர் நாளுக்கு நாள் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். எனவே அவர் 4-ம் நிலை வீரராகக் களமிறங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.