டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தொடரை வெல்வது தான் இப்போது முக்கியம்: ரோஹித் சர்மா

இப்போது நாங்கள் டி20 தொடரை வெல்ல முயற்சி செய்யவேண்டும். அது எங்களை நன்கு ஊக்கப்படுத்தும்...

News image
Updated On :10 டிசம்பர் 2019, 12:06 pm

இரண்டாவது டி20 ஆட்டத்தில் மே.இ.தீவுகள் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்தியா 170/7 ரன்களைக் குவித்தது. 1.3 ஓவா்கள் மீதமிருந்த நிலையில் 18.3 ஓவா்களில் மே.இ.தீவுகள் 2 விக்கெட் இழப்புக்கு 173 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரா் லென்டில் சிம்மன்ஸ் நிலைத்து ஆடி, தலா 4 சிக்ஸா், பவுண்டரியுடன் 45 பந்துகளில் 67 ரன்களை விளாசினாா். 8 விக்கெட் வித்தியாசத்தில் மே.இ.தீவுகள் வென்ற நிலையில் தற்போது தொடரில் 1-1 என சமநிலை ஏற்பட்டுள்ளது. மூன்றாவது டி20 ஆட்டம் நாளை மும்பையில் நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் இந்திய வீரர் ரோஹித் சர்மா, செய்தியாளர்களிடம் பேசியதாவது:

டி20 உலகக் கோப்பைக்காக அணியைத் தயார் செய்து வருகிறோம் என்று மீண்டும் மீண்டும் நான் சொல்ல மாட்டேன். அதற்கு இன்னும் நீண்ட தூரம் செல்லவேண்டியுள்ளது. இப்போது நாங்கள் டி20 தொடரை வெல்ல முயற்சி செய்யவேண்டும். அது எங்களை நன்கு ஊக்கப்படுத்தும். நாங்கள் தொடர்ச்சியாக வெல்லும்போது அணியின் அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பது தானாக அமைந்துவிடும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.