கடந்த செப்டம்பர் மாதம், சர்வதேசக் கால்பந்து கூட்டமைப்பின் (பிஃபா) சிறந்த விளையாட்டு வீரர் விருதை ஆறாவது முறையாக வென்று சாதனை படைத்தார் 32 வயது லியோனல் மெஸ்ஸி. இந்நிலையில், சிறந்த கால்பந்து வீரருக்கு வழங்கப்படும் விருதான பேலன் தோர் விருதையும் லியோனல் மெஸ்ஸி வென்றுள்ளார்.
பிரான்ஸ் நாட்டிலிருந்து வெளிவரும் பிரான்ஸ் ஃபுட்பால் என்கிற பத்திரிகை சார்பில் 1956 முதல் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது. பல்வேறு தரப்பினரிடம் நடத்தப்படும் வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த விருதுக்குரியவர் தேர்வு செய்யப்படுகிறார்.
தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக பேலன் தோர் விருதை ரொனால்டோவும், மெஸ்ஸியும் போட்டிபோட்டு வென்றார்கள். கடந்த வருடம் அதை மாற்றினார் மொட்ரிக். ரொனால்டோ,மெஸ்ஸியின் 10 ஆண்டுக்கால ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 2018-ம் ஆண்டுக்கான பேலன் தோர் விருது குரோஸிய வீரர் லுகா மொட்ரிக்குக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த வருடம் இந்த விருதை மீண்டும் வென்றுள்ளார் மெஸ்ஸி.
இதற்கு முன்பு, பேலன் தோர் விருதைக் கடைசியாக 2015-ல் பெற்றார் மெஸ்ஸி. மொத்தமாக 2009, 2010, 2011, 2012, 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் இவ்விருதை அவர் வென்றுள்ளார். 2018-19 சீஸனில் தனது நாட்டுக்காகவும் கிளப்புக்காகவும் 54 கோல்களை மெஸ்ஸி அடித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
பொல்லாத ஆசைகள்... 29 புதிய பாடல்!

தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம்

தற்கொலை செய்திருப்பேன்... விஜய் குமார், அவரது மனைவி மீது குற்றம் சுமத்தி விடியோ வெளியிட்ட இளம் நடிகை!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


