/

நேற்றிரவு டி20 போட்டியில் விளையாடி முடித்து, நடிகையை இன்று திருமணம் செய்த இந்திய வீரர் மணிஷ் பாண்டே! (படங்கள்)

சித்தார்த் நடித்த உதயம் என்.ஹெச்4 படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அஷ்ரிதா. 

News image
Updated On :2 டிசம்பர் 2019, 10:47 am

30 வயது மணீஷ் பாண்டே 23 ஒருநாள், 32 டி20 ஆட்டங்களில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். அடுத்ததாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களிலும் இந்திய அணியில் அவர் இடம்பெற்றுள்ளார். 

நேற்று சூரத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தேசிய டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் மணிஷ் பாண்டே தலைமையிலான கா்நாடக அணி சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டது. முதலில் ஆடிய கா்நாடகம் 180/5 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக 60 ரன்கள் குவித்தார் மணிஷ் பாண்டே. பின்னா் ஆடிய தமிழகம் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களைக் குவித்து போராடித் தோற்றது.

நேற்றிரவு சூரத்தில் விளையாடி தன் அணி டி20 கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த மணிஷ் பாண்டே, இன்று நடிகை அஷ்ரிதா ஷெட்டியை மும்பையில் திருமணம் செய்தார். சித்தார்த் நடித்த உதயம் என்.ஹெச்4 படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அஷ்ரிதா. 

மணிஷ் பாண்டே - அஷ்ரிதா திருமணப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. 

Story image
Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.